states

img

வானில் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல்

வானில் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல்

மோடி 3ஆவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்த பிறகு நாட்டில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், விமான நிலையங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுப்பது சகஜமான விஷயமாக மாறிவிட்டது. மிரட்டலுக்குப் பின் இது வெறும் புரளி என்று கூறப் பட்டாலும், நாட்டில் தொடர்ச்சியாக வரும் மிரட்டல்கள் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளன.  இந்நிலையில், தில்லியில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகா ராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தில்லிக்கு செவ்வாய்க்கிழமை அன்று காலை சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் (6E 762) 200க்கும் அதிகமா னோர் பயணித்தனர் விமானம் தில்லியை நெருங்கி பறந்து கொண்டிருக்கும் போது, விமான கட்டுப்பாட்டு அறைக்கு மின் னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, விமானம் தில்லி விமான நிலையத்தில் அவசர அவசர மாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தில்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.