இன்று 10 கிராமங்களில் உழவரைத்தேடி வேளாண் முகாம்
நாகர்கோவில்,அக்.9- வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ”உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” கிராம முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் தோறும் நான்கு வருவாய் கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் 10 அன்று ராமபுரம், திருப்பதிசாரம், திருவிதாங்கோடு, வில்லுக்குறி பி, செறுகோல், மஞ்சாலுமூடு ஆகிய 6 கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் தலை மையிலும் சிறமடம், செம்பொன்விளை, பெருஞ்சாணி, களியல் ஆகிய 4 கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அனைத்துத்துறைகளின் வட்டார அலு வலர்கள், சார்புத்துறை அலுவலர்களான கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவி யல் நிலைய விஞ்ஞானிகள், ஆகியோர்களால் உழவர்க ளை அவர்களது வருவாய் கிராமங்களுக்கே சென்று நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோ சனைகளை வழங்குவதோடு வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும் வேளாண்மை உழவர்நலத் துறை மற்றும சார்புத்துறைகளின் திட்டங்களையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இம்முகாம்களில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறு மாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.