காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
காசாவில் கடந்த 20 மாதங்களாக இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவை மோடி பாராட்டியிருப்பது கேவலமான விஷயம். பாலஸ்தீனத்தை ஒரு நாடாக 150 நாடுகள் அங்கீகரித்திருக்கும் நிலையில், அது குறித்தும் மோடி கள்ளமௌனம் காத்திருக்கிறார். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைத்திருக்கும் காசா அமைதி திட்டத்தை மின்னல் வேகத்தில் மோடி வரவேற்றுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் ஊடகங்களில் பேசும் அளவிற்கு மரியாதையை பெற்றுள்ளார். சனாதன மத விழுமியங்களுக்காக நீதிமன்றத்தை மிரட்ட முயன்றதில் ராகேஷ் கிஷோர் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
தலித் அல்லாத ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்திருந்தால், யாரேனும் காலணி வீசியிருப்பார்களா? எத்தனை உயரிய பதவியை ஒருவர் வகித்தாலும், அவர் தலித்தாக இருந்தால், அவமதிப்பை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற செய்தியை மக்களுக்கு தொடர்ந்து உணர்த்த விரும்புகிறார்கள்.
பத்திரிகையாளர் சோஹித் மிஸ்ரா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசியவர் சுதந்திர மாக சுற்றி வருகிறார். ஆனால் இந்த சம்பவத்தை விமர்சித்த பத்திரிகையாளர் நிகில் வாக்லே மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இது என்ன மாதிரியான ஜனநாயகம் என்று தெரியவில்லை.