நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் பசுமை பட்டாசுகளை தவிர மற்ற பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை செய்யப்படுகிறது. மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சூரிய ஒளி இருக்கும் நேரம் கடந்த 30 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் நடத்திய ஆய்வில் அச்சுறுத்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் சிறிய ரக தனியார் விமானம் விபத்துக்குள்ளானது. புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகிலுள்ள புதர்களில் பாய்ந்தது. விமானத்தில் இருந்த 2 விமானிகளும், பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.