games

img

விளையாட்டு...

மகளிர் டி-20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடக்கம்   

9ஆவது சர்வதேச மகளிர் டி-20  உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழ னன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை (இதுவரை ஏ பிரிவு), இங்கிலாந்து, வங்கதேசம், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் (இதுவரை பி பிரிவு) ஆகிய 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பை தொடர் துபாய், ஷார்ஜா ஆகிய 2 மைதானங்களில் நடைபெறுகிறது. 10 அணிகளும் தலா 5 என இரு  பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணி களுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறு திக்கு தகுதி பெறும். இந்நிலையில், தொடக்க விழா விற்கு பின்பு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து  மோதுகின்றன. இந்த ஆட்டம் வியா ழனன்று மாலை 3:30 மணிக்கு நடைபெற வுள்ள நிலையில், அதே நாளின் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 2ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள் கிறது. இந்த ஆட்டம்  வெள்ளியன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம் - ஸ்காட்லாந்து
நேரம் : மாலை 3:30 மணி

பாகிஸ்தான் - இலங்கை
நேரம் : இரவு 7:30 மணி

இரண்டு ஆட்டங்களும் : ஷார்ஜா மைதானம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)

சீன ஓபன் டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்

உலகின் முக்கிய சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் புதனன்று நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர், தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-7 (6-8), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இளம் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி தென் ஆப்பிரிக்காவிற்கு என்ன ஆச்சு?

கிரிக்கெட் உலகில் தலைசிறந்த அணிகளில் ஒன்றான அதிரடிக்கு பெயர் பெற்ற தென் ஆப்பிரிக்கா திடீரென  மோசமான அளவில் பார்ம் பிரச்சனையை சந்தித்து இளம் அணிகளிடம் அடுத்தடுத்து படு தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணி யிடம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், மற் றொரு இளம் அணியான அயர்லா ந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி யை சந்தித்து டி-20 தொடரை சமன் செய்தது. ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய இரு அணிகளும் கிரிக்கெட் உலகின் மிக  இளம் அணிகள் ஆகும். இந்த 2 அணிகளிடம் பலம்வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்து, ஆட்டத்திறனில் திணறி வருவது அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.