சக்கர கால்களால் சரித்திரம் படைத்த மாணவர்!
“விழுவது எழுவதற்கே!” இந்த எளிய ஆனால், ஆழமான வாக்கியத்தை தனது வாழ்க்கைக் கொள்கையாக்கிக் கொண்டு, காற்றுக்கும் போட்டிபோடும் வேகத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சேலம் மாவட்டம், அமரகுந்தி கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவன். தாரமங்கலம் வேதாத்ரி மகரிஷி ஸ்மார்ட் பள்ளி யில் பிளஸ் டூ படிக்கும் டி. கவுதம், சக்கரங்களை காலில் கட்டிக்கொண்டு, தனது கனவுகளுக்கு சிறகுகளைக் கட்டியிருக்கிறார். உலக சாதனை! ஓமலூரில் சமீபத்தில் நடைபெற்ற 42 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் மாரத்தானை வெறும் 1 மணி நேரம் 20 நிமிடங்களில் மின்னல் வேகத்தில் கடந்து, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைத் தங்க எழுத்துக்களால் பொறித்துள்ளார் இந்தச் சிறுவன். இது வெறும் ஒரு சாதனை மட்டுமல்ல, லட்சியம் உறுதியாக இருந்தால் சாதா ரண உழைப்பாளியின் மகனும் உல கை வெல்ல முடியும் என்பதற்கான உயிரோட்டமான சான்று. உழைப்பே மூலதனம் தந்தை தாமோதர சக்கரவர்த்தி, தார மங்கலத்தில் ஒரு சிறிய விளையாட்டு உபகரணக் கடை நடத்தி வருகிறார். உற வினர்கள் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், இன்று கவுதம் தமிழகத்தின் பெருமையாக, இந்தியா வின் எதிர்காலமாக ஜொலிக்கிறார். தாய் சரஸ்வதியின் அசைக்க முடியாத நம்பிக்கையும், தந்தையின் அர்ப்பணிப்பும் தான் இந்தச் சாதனைக்குப் பின்னால் இருக்கும் உண்மையான சக்தி. பொருளாதாரச் சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், மகன் சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தனது உழைப்பையே மூலதனமாக்கி, கவுதமின் கனவுகளுக்குத் தீனி போட்டு வருகிறார் தந்தை. விடாமுயற்சியின் பயணம் 4ஆம் வகுப்பிலேயே ஸ்கேட்டிங் சக்கரத்தை முதன்முதலாக அணிந்த கவுதமின் கால்களுக்கு, அந்தச் சக்க ரங்கள் சிறகுகளாக மாறின. சிறிய கிராமம் என்பதால் மைதானம் கிடை யாது. பேருந்து போக்குவரத்து செல்லும் சாலையில் ஓடத்து துங்கினார். ஆரம்பத்தில் மைசூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ராவ் என்ற பயிற்சியாளர் அவ ருக்கு அடிப்படைப் பயிற்சிகளை வழங்கினார். அதன் பிறகு, கோவை டி.ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அகாடமியின் ஈரோடு நந்தகுமார், தாரமங்கலம் சங்கர் ஆகிய இரு பயிற்சியாளர்கள் கவுதமின் திறமையை மெருகேற்றினர். இன்றைக்கும் வார இறுதி நாட் களைக் கூட வீணாக்காமல் கோவைக்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்கி றார். இந்த உழைப்பாளி மாணவன். பள்ளிப் படிப்பும், தீவிரப் பயிற்சியும் என்று இரட்டைப் பாதையில் ஓடிக் கொண்டிருக்கும் அவரது பயணமே அவரது வெற்றிக்கான உண்மையான ரகசியம். தங்க வேட்டைக்காரன்! இதுவரை 70க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ள கவுதம், 30 தங்கம் உட்பட நாற்பதுக்கும் மேற் பட்ட பதக்கங்களை வென்று குவித்துள் ளார். ஒவ்வொரு பதக்கமும் அவரது உழைப்பின் வியர்வைத் துளிகள், அவ ரது குடும்பத்தின் தியாகத்தின் பதிவுகள். குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பல்கலைக்கழகப் போட்டியில் அவர் வென்ற தங்கப் பதக்கம், தமிழகத் திற்கே பெருமை சேர்த்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. “ஆசியப் போட்டியே இலக்கு!” கவுதமின் பார்வை இன்னும் தொலைவில் பறக்கிறது. “இந்தியா விற்காக ஆசிய விளையாட்டுப் போட்டி களில் தங்கம் வெல்வதே என் இலக்கு” என்று உறுதியான குரலில் தெரிவிக் கிறார் இந்த இளம் சாதனையாளர். அவ ரது கண்களில் தெரியும் தீயும், குரலில் ஒலிக்கும் உறுதியும், சர்வதேச போட்டி களில் விளையாடி பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது கனவுகள் வெறும் கனவுகளாக இல்லாமல், எதிர்காலத்தில் நிஜமாகப் போகின்றன என்பதற்கான சான்றுகள். சர்வதேச அங்கீகாரம் இந்தச் சாதனை இப்போது கின்னஸ் உலக சாதனைப் புத்தகம், ஆசிய சாத னைகள் புத்தகம், இந்திய சாதனைகள் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளால் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட உள்ளது. கவுதமின் பெயர் இனி வெறும் பெயராக இல்லாமல், சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு கிராமப்புற மாணவனுக்கும் ஊக்கமூட்டும் ஒரு சின்னமாக மாறியிருக்கிறது. வறுமையை சக்கரங்களாக மாற்றிய வீரன்! சில கனவுகள் நினைக்கப்படு வதற்காக அல்ல சாதிக்கப்படுவதற் காக. ஒவ்வொரு மீட்டரும் தன்னம்பிக் கையால் எழுதப்பட்ட வரலாறு. ஒரு சாதாரண ஓட்டம் அல்ல இது மனதின் ஓட்டம் உழைப்பின் உறுதியின் ஓட்டம். விழாமல் எழுந்த கால்கள் நின்று விடாத மனம் இதுதான் உண்மையான வெற்றி. சக்கரங்களை சிறகுகளாக மாற்றி, காற்றுக்கு சவால்விடும் இந்த இளைஞனின் வேகம், எதிர்கால இந்தி யாவின் வெற்றிக்கான அடையாளம். “சக்கர கால்களால்” உலக அரங்கில் தடம் பதித்த தாரமங்கலம் கவுதம், இந்தி யாவின் எதிர்காலக் கனவும் கூட. விழுந் தும் எழுந்தும், வெற்றியை நோக்கி சக்கரங்களுடன் பறக்கும் இந்த இளைஞனின் பயணம், இன்னும் ஆரம்பமே! ஒரு தலைமுறைக்கு ஊந்துதல் தரும் வெற்றியும் கூட! - சி.ஸ்ரீராமுலு
