தொடாதீர்கள்..!
கோவாவில் உள்ள தபோலிம் சர்வதேச விமான நிலையத்தை கடற்தளமாக மாற்றும் முயற்சி நடக்கிறது. தற்போது விமான நிலையம் தனியார் வசம் உள்ளது. அதை கடற்தளமாக மாற்ற தனியார் நிறுவனம் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தபோலிம் விமான நிலையத்தைத் தொடாதீர்கள்.. அதைத் தொட்டால் ஒட்டுமொத்த கோவாவின் பொரு ளாதாரமே பாதித்து விடும் என்று அனைத்துக் கட்சியின ரும் கோரியுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 1 கோடியே 90 லட்சம் உள்நாட்டுப் பயணிகள் தபோலிம் விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ள னர். சுற்றுலாப் பயணமாக தபோலிம் வந்து சென்ற வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையோ பத்து லட்சத்தைத் தொட்டிருந்தது. தனியார் நிறுவ னத்திற்கு சாதகமாக ஒன்றிய அரசு இயங்குகிறது என்று குற்றச்சாட்டை ஆளும் பாஜகவினரே வைத்து வருகிறார்கள்.
தந்துவிடுங்கள்
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சந்தோஷ் ஜக்தாலேயின் குடும்பத்தின ருக்கு அரசு வேலை தருவோம் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படாமலேயே இருந்து வந்தது. எதிர்க்கட்சியினரும், பொது மக்களும் இது பற்றிக் கண்டனம் தெரிவித்தனர். கடந்த பத்து மாதங்களாகவே சந்தோஷின் மகள் ஆஷாவரிக்கு வேலை தராமல் ஏமாற்றி வந்தனர். தற்போது மக்கள் மத்தியில் கடும் அதி ருப்தி கிளம்பியுள்ளதால் மகாராஷ்டிரா முதல மைச்சர் பட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவரும் வேலை தருவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுங்கள் என்று புனே மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்கள். இருந்த வேலையை யும் உதறிவிட்டு, அரசை நம்பி வந்த ஆஷாவரி க்கு இந்த முறையாவது ஏமாற்றாமல் வேலை தருவார்கள் என்று அவரின் உறவினர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கொடுப்பீர்களா..?
புதிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்ற தில் இருந்தே பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தில்லியில் முகாமடித்துள்ளனர். நாடாளுமன்றக் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இளைஞர் நிதின் நபின் நிய மிக்கப்பட்டதால், அது போலவே நிறைய இளை ஞர்களுக்கு அகில இந்திய அளவிலான பொறுப்பு களும் கிடைக்கும் என்று நினைத்து தலைமை அலுவலகத்தை வளைய வருகிறார்கள். சிலரோ, தில்லியைச் சுற்றி என்ன பயன் என்று சொல்லிவிட்டு, நாக்பூரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கட்சி மாறி வந்தவர்களுக்குதான் பெரிய இடங்களின் அறிமுகங்கள் மிகவும் எளிதாகக் கிடைக்கின்றன என்ற குமுறல்கள் ஏராளமாக ஒலிக்கின்றன. அமித் ஷாவின் கைதான் ஓங்கியிருக்கிறது என்று தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாப்பிடாதீர்கள்..!
திறந்தவெளி உணவகங்களில் அசைவ உணவு பரிமாறக்கூடாது என்று பீகார் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசு பேசி வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அசைவ உணவுக்கெதிராகப் பல்வேறு விதிமுறை களைக் கொண்டு வருகிறார்கள். ஒடிசாவில் எந்தப்பண்டிகை வந்தாலும் அந்த நாளில் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக் கிறார்கள். தற்போது அதே போன்ற நடை முறையை பீகாரில் நடைமுறைப்படுத்த முயற்சி நடக்கிறது. இந்த விதிமுறை கள் சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய உணவகங்களை முதலில் குறி வைக்கின்றன. அதோடு, இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில் கடுமையான நடவ டிக்கைகளை மேற்கொள்கிறார்கள். வெறுப்பு அரசியலின் ஒரு பகுதியா கவே இது நடக்கிறது என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
