states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள

மூத்த பத்திரிகையாளர் பார்த் எம்.என்.

உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா ஏற்கெனவே 151ஆவது இடத்தில் உள்ளது. இது நேபாளம், வங்கதேசத்தை விடவும் குறைவான இடமாகும். எதிர்காலத்தில் இதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

எழுத்தாளர் ரவி நாயர்

அதானி குழுமத்துடன் தொடர்புடையவர்களாக அறியப்படும் நாசர் அலி, சாங் சுங்-லிங் ஆகிய இருவர், இந்தியாவில் உள்ள அதானி குழுமப் பங்குகளில் ரகசியமாக 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளனர். அதானிக்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே இந்த முதலீட்டைச் செய்ததாக இருவரும் சுவிஸ் முதலீட்டு நிறுவனத்திடம் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

சிவசேனா (உத்தவ்) பொதுச்செயலாளர் ஆதித்யா தாக்கரே

இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரியுங்கள்; அவர்களுக்குச் சிறந்த வசதிகளைச் செய்து கொடுங்கள். ஆனால் இதே போல நாட்டு மக்களையும் கவனியுங்கள். அவர்களின் குறையைக் கேளுங்கள். மக்கள் தான் இந்திய நாட்டின் எஜமானர்கள்.

சமூக ஆர்வலர் சந்தீப்

தில்லியில் நடைபெற்று வரும் ஏஐ மாநாட்டை முன்னிட்டு பிரதமர் மோடி ஒரு ரீல் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவை படமாக்குவதற்காக மோடி மாநாடு நிகழ்வு நடைபெறும் இடம் முழுவதையும் 6 மணிநேரம் காலியாக வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.