டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் கடைசி லீக் போட்டியிலும் வெற்றி பெறுமா இந்தியா?
இந்தியா - இலங்கை நாடு களில் கூட்டாக நடை பெற்று வரும், டி-20 உல கக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து (குரூப் ஏ) அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. புதனன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. 3 லீக் ஆட்டங்களில் வெற்றியை பெற்றுள்ளதால் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இத னால் இந்திய அணிக்கு இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயம் தான். எனினும் லீக் போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல், நெதர்லாந்து அணியை வீழ்த்தி முதலிட அந்தஸ்துடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற இந்திய அணி தீவிர பயிற்சியுடன் களமிறங்கு கிறது. நெதர்லாந்து அணியை பொறுத்த வரையில், 3 லீக் போட்டிகளின் 2இல் தோல்வி அடைந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அத னால் இந்திய அணியை வீழ்த்தி, மற்ற அணிகளின் வெற்றி தோல்வி மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற நெதர் லாந்து அணி கணக்கு போட்டு கள மிறங்க உள்ளது. எனவே இரு அணி களும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பர பரப்பாக நடைபெறும் என எதிர்பா ர்க்கப்படுகிறது.
சூப்பர் 8 சுற்றில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா
செவ்வாயன்று காலை தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடை பெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் நியூஸி லாந்து - கனடா (குரூப் டி) அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய கனடா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 15.1 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. மேலும் குரூப் டி பிரிவிலிருந்து தென் ஆப்பிரிக்கா அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், ஆப்கானிஸ்தான், கனடா, யுஏஇ ஆகிய அணிகள் உலகக் கோப்பை தொடரில் வெளியேறியுள்ளது. கடந்த டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அரையிறுதி வரை முன்னேறி இருந்த நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டியிலேயே வெளியேறி இருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்களன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் 28ஆவது லீக் : வெற்றி - ஆப்கானிஸ்தான் (தோல்வி - யுஏஇ) 29ஆவது லீக் : வெற்றி - இங்கிலாந்து (தோல்வி - இத்தாலி) 30ஆவது லீக் : வெற்றி - இலங்கை (தோல்வி - ஆஸ்திரேலியா)
இன்றைய ஆட்டங்கள்
தென்ஆப்பிரிக்கா - யுஏஇ (குரூப் டி ) நேரம் : காலை 11:00 மணி இடம் : தில்லி மைதானம் பாகிஸ்தான் - நமீபியா (குரூப் ஏ ) நேரம் : மதியம் 3:00 மணி இடம் : கொழும்பு, இலங்கை
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஜியோ (தொலைக்காட்சி), ஹாட் ஸ்டார் (ஓடிடி) தமிழ் உட்பட 5 மொழிகளில் நேரடி வர்ணனை வசதி செய்யப்பட்டுள்ளது
குளிர்கால ஒலிம்பிக் - 2026 பதக்கப் பட்டியல்
நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1. நார்வே 12 7 9 28
2. இத்தாலி 8 4 11 23
3. அமெரிக்கா 6 8 5 19
4. நெதர்லாந்து 6 5 1 12
5. ஆஸ்திரியா 5 7 3 15
