ராகுல் காந்திக்கு எதிரான பாஜகவின் அவதூறு வழக்கு தள்ளுபடி
2023ஆம் ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய பாஜக அரசுக்கு எதிராக முக்கிய நாளிதழ்களில் ‘அவதூறு’ பரப்பும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டதாக அவதூறு வழக்கு தொ டரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் 4ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப் பட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வழக்கினை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு திங்களன்று உயர்நீதி மன்ற நீதிபதி எஸ். சுனில் தத் யாதவ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பிறகு, “ராகுல் காந்திக்கு எதிரான இந்த அவதூறு வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்வது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமமாகும். அதனால் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது” என உத்தரவிட்டார்.
