games

img

விளையாட்டு

டி-20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் மே.இ. தீவுகள் ; வெளியேறியது நேபாளம்

இந்தியா - இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் - நேபாளம் (குரூப் சி) அணிகள் மோதின.  மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. நேபாளம் அணி சார்பில் திபேந்திர சிங் 58 ரன்கள் எடுத்தார். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் அதிகபட்சமாக ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங் கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஹோப் (61 ரன்கள்), ஹெட்மேயர் (46  ரன்கள்) ஆகியோரின் நிதான அதிரடி யால், 9 விக்கெட் வித்தியாசத்தில் (15.2  ஓவர்கள் : 134-1) அபார வெற்றி பெற் றது. இந்த வெற்றியின் மூலம் மேற்கு  இந்தியத் தீவுகள் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. நேபாளம் அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. முன்னதாக ஓமன் அணி உலகக்கோப்பையில் இருந்து முதல் அணியாக வெளியேறி யது என்பது குறிப்பிடத்தக்கது.

சனியன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் 22ஆவது லீக்: வெற்றி-அயர்லாந்து (தோல்வி-ஓமன்) 23ஆவது லீக்: வெற்றி-இங்கிலாந்து (தோல்வி- ஸ்காட்லாந்து) 24ஆவது லீக்: வெற்றி-தென் ஆப்பிரிக்கா  (தோல்வி- நியூஸிலாந்து)

இன்றைய ஆட்டங்கள்

ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் (குரூப் டி ) நேரம் : காலை 11:00 மணி இடம் : தில்லி மைதானம் இங்கிலாந்து - இத்தாலி   (குரூப் சி) நேரம் :  மதியம் 3:00 மணி இடம் : கொல்கத்தா, மேற்கு வங்கம் ஆஸ்திரேலியா - இலங்கை (குரூப் பி) நேரம் : இரவு 7:00 மணி இடம் : கொழும்பு, இலங்கை

குளிர்கால ஒலிம்பிக் 2026 : தொடக்கத்திலேயே அதிக காயங்கள்

25ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலி நாட்டின் மிலன், கார்டினா நகரில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் தொடக்கத்தி லேயே அதிக காயங்கள் ஏற்பட்டுள் ளன. அதிவேக பனிச்சறுக்கு விளை யாட்டு பிரிவான ஆல்ப்பைன் ஸ்கீயிங், ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட போட்டி களில் காயங்கள் காரணங்கள் கார ணமாக வீரர் - வீராங்கனைகள் விலகி யுள்ளனர்.  லிண்ட்சே வான் என்ற 41 வயது அமெரிக்க வீராங்கனை மகளிர் ‘டவுன்ஹில்’ போட்டியில் பலத்த காய மடைந்தார். ஏற்கெனவே முழங்கால் காயத்துடன் பங்கேற்ற அவர், இப்போட்டியின் போது இடது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு தொட ரில் இருந்து விலகி, மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  16 வயது இளம் உள்ளூர் வீராங் கனையான (இத்தாலி) ஜியாடா டி  ஆண்டோனியோ பயிற்சிக் களத்தில் ஏற்பட்ட விபத்தில் முழங்கால் காயத் தால் தொடரில் இருந்தே விலகியுள் ளார். அதே போல இத்தாலியின் நட்சத்திர வீராங்கனையான மார்க்டா பாசினோ (29 வயது) பனிச்சறுக்குப் பிரிவில் ஏற்பட்ட கால் எலும்பு முறிவு காரணமாக ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறினார். ஐஸ் ஹாக்கியில் கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சுவிட்சர் லாந்து வீரர் கெவின் பியாலா பலத்த காயம் காரணமாக மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவ மனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். இதனால் ஆல்ப்பைன் ஸ்கீயிங் நடைபெறும் கோர்டினா டி’அம்பெசோ தளம் பதற்றமாக காணப்படுகிறது.

குளிர்கால ஒலிம்பிக் - 2026 பதக்கப் பட்டியல்

     நாடுகள்        தங்கம்       வெள்ளி      வெண்கலம்      மொத்தம் 1.     நார்வே    10    4    7    21  2.    இத்தாலி    6    3    9    18  3.    அமெரிக்கா    5    8    4    17 4.    சுவீடன்    5    4    1    10 5.    ஆஸ்திரியா    4    6    3    13