games

img

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் துறையில் இனவெறி பாகுபாடு வர்ணனையாளர் பதவியிலிருந்து விலகிய தமிழ்நாடு நட்சத்திரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லட்சுமண் சிவராமகிருஷ்ணன் (60) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். சுழற்பந்துவீச்சாளரான இவர் 1983 முதல் 1987 இந்திய தேசிய அணிக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில், வெள்ளியன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரி யத்தின் (பிசிசிஐ) வர்ணனையாளர் பணியிலிருந்து விலகுவதாக லட்சு மண் சிவராமகிருஷ்ணன் திடீரென அறிவித்தார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”பிசிசிஐ வர்ணனையாளர் பதவியில் இருந்தும், கடந்த 23 ஆண்டுகளாக டாஸ் போடும் நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழாக்க ளுக்கு நான் பயன்படுத்தப்பட வில்லை. ரவி சாஸ்திரி பயிற்சியா ளராக இருந்தபோது கூட, புதியவர்கள் வந்து பிட்ச் ரிப்போர்ட், டாஸ் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகளை நடத்து கிறார்கள் என்றால், அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பி, விலகல் முடிவை அறி வித்தார். அந்தப் பதிவிற்குப் பதிலளித்த ஒரு பயனர்,”ஒருவேளை உங்கள் நிறம் (கருப்பு) காரணமாக இருக்க லாம்” எனப் பதிவிட்டார். அதற்கு சிவ ராமகிருஷ்ணன், “நீங்கள் சொல்வது சரிதான். இது நிறவெறி பாகுபாடு தான்” என்று பதிலளித்தார். ஜெய் ஷா மிரட்டினாரா? இந்தப் பதிவுகள் வைரலானதை அடுத்து, சனியன்று சிவராமகிருஷ் ணன் மேலும் ஒரு விளக்கத்தை அளித்தார். அதில்,”தனது கோபம் ஒட்டுமொத்த பிசிசிஐ நிர்வாகத்திற்கு எதிரானது அல்ல. தனது முடிவிற்கும் முன்னாள் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”பிசிசிஐ நிர்வாகத்தை இதில் இழுக்க வேண்டாம். இது பிசிசிஐ-இன் ஒரு ஊழியருக்கும், எனக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். ஜெய் ஷா மற்றும் அவ ரது குழுவினருக்கும் இதற்கும் எந்த  சம்பந்தமும் இல்லை. எனது வாழ்க்கை யை நான் இப்போது எனது கட்டுப் பாட்டில் எடுத்துக்கொள்கிறேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு என்று நினைக்கிறேன்” என அவர் கூறினார். லட்சுமண் சிவராமகிருஷ்ணன் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கூறியதற்கு பிசிசிஐ முன் னாள் செயலாளரும், தற்போதைய சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான ஜெய் ஷா மிரட்டல் காரணமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  எனினும் இந்திய கிரிக்கெட் துறை யில் இனவெறி பாகுபாடு காரணமாக வர்ணனையாளர் பதவியிலிருந்து  தமிழ்நாடு நட்சத்திரம் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் விலகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

50 மீட்டர் ; 20.88 வினாடிகள் ஆஸி., நீச்சல் வீரர் கேமரூன் மெக் எவோய் உலக சாதனை

சீனாவின் ஷென்செனில் நடை பெற்று வரும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் 31 வயதான ஆஸ்திரேலிய வீரர் கேமரூன்மெக் எவோய் 50 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் புதிய உலக  சாதனை படைத்தார். ஆடவர் 50 மீட்டர் தூரத்தைவெறும் 20.88 வினாடிகளில் எட்டி, 17 வருட கால உலக சாதனையை கேமரூன் வெறும் 0.003 வினாடிகளில் தகர்த்துள் ளார். பிரேசில் வீரர் சீசர் சியலோ 2009ஆம் ஆண்டு 50 மீட்டர் தூரத்தை  20.91 வினாடிகளில் கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. இதுதொடர்பாக கேமரூன் கூறு கையில், “எனது பழைய சாதனை 21.06 வினாடிகள். எனவே ஒரு வேளை 20.99 வினாடிகளில் முடிக்க லாம் என நினைத்தேன். ஆனால் 20.88 வினாடிகள் என்பது கற்பனை செய்ய  முடியாதது. இது ஆச்சரியமாக இருக்கிறது” என அவர் கூறினார். சியலோ வாழ்த்து தனது உலக சாதனையை முறிய டித்த கேமரூனுக்கு சியலோ வாழ்த்து  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கூறுகையில்,”வாழ்த்துகள் கேம். மின்னல் வேக நீச்சல்! அற்பு தம்!” என்று பதிவிட்டு வாழ்த்து தெரி வித்துள்ளார்.