பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்ப் பதற்றம் பிஎஸ்எல் டி-20 தொடர் நடைபெறுமா?
மேற்கு ஆசிய நாடுகளில் நீடிப்பதைப் போல, கடந்த 2 மாத காலமாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரு கின்றன. குறிப்பாக 2 நாட்களுக்கு முன், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிஎஸ்எல் தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்பது இந்தியாவில் நடை பெறும் ஐபிஎல் டி-20 தொடரைப் போல பாகிஸ்தான் நாட்டில் நடை பெறும் உள்ளூர் டி-20 தொடர் ஆகும். ஐபிஎல் தொடரைப் போலவே வெளி நாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். நடப்பாண்டுக்கான பிஎஸ்எல் தொடர் மார்ச் 26 தொடங்கி, மே 3 அன்று முடிவடைகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக பிஎஸ்எல் தொடருக்காக பாகிஸ்தான் நாட்டிற்கு, தங்கள் நாட்டின் வீரர்களை அனுப்ப கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. ஆஸ்தி ரேலிய அரசாங்கம் தனது நாட்டு வீரர் களைப் பாகிஸ்தானுக்குச் செல்ல அனுமதித்தாலும், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியான பெஷாவர் நகருக்குச் செல்லத் தடை விதித்துள்ளது. அந்தப் பகுதியை “பயணம் செய்யக் கூடாத பகுதி” என ஆஸ்திரேலியா பட்டியலிட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்னஸ் ஆகியோர் பிஎஸ்எல் தொட ரில் விளையாட உள்ளனர். குறிப்பாக பெஷாவர் அணியில் ஆரோன் ஹார்டி யும், ராவல்பிண்டி அணியில் ஜேக் பிரேசர்-மெக்கர்க்கும் உள்ளனர். தயக்கம் ஆஸ்திரேலிய அரசாங்கம் தைரியமாக வீரர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் மற்ற நாடுகள் தங்களது வீரர்களின் பாது காப்பு குறித்து கருத்து தெரிவிக்க வில்லை. இங்கிலாந்து, தென் ஆப்பி ரிக்கா, நியூஸிலாந்து நாடுகள் தங்க ளது வீரர்களை திரும்பப் பெற வாய்ப் புள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இதனால் பிஎஸ்எல் டி-20 தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
சல்மான் அலி ஆகா ரன் - அவுட் விதிமுறைப்படி சரிதான் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் விளக்கம்
டாக்காவில் (வங்கதேச தலைநகர்) நடைபெற்ற வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆட்டமிழந்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) தனது விளக்கத்தை அளித்துள்ளது. பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அடித்த பந்தை வங்கதேச ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் சல்மான் அலி ஆகா மீது மோதினார். இந்த மோதலால் குழப்ப மடைந்த ஆகா, ஆட்டம் நின்றுவிட்டது என நினைத்து தரையில் இருந்த பந்தை எடுத்து பந்துவீச்சாளரிடம் கொடுக்க முயன்றார். ஆனால், ஹசன் உடனடியாக பந்தை எடுத்து ஸ்டம்பில் அடிக்க, ஆகா கிரீஸுக்கு வெளியே இருந்ததால் ரன்-அவுட் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக எம்சிசி அளித்த விளக்கத்தில்,”பந்து ஆட்டத்தில் இருக்கும்போது (Ball in play) பேட்டர் தனது எல்லைக்கு வெளியே இருந்தார். எனவே நடுவர்களின் முடிவு சட்டப்படி சரியானது தான். ஒரு பேட்டர் பீல்டிங் செய்யும் அணியின் அனுமதியின்றி பந்தைக் கையில் எடுக்க முயலக் கூடாது. அப்படிச் செய்தால் ஆட்டத்திற்கு இடையூறு விளைவித்தல் என்ற அடிப்படையில் அவர் ஆட்டமிழக்க நேரிடும். சல்மான் அலி ஆகா பந்தை எடுக்க முயன்றதற்குப் பதில் தனது இடத்திற்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் செல்லவில்லை. வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் (தெரியாமல் இடித்துக் கொள்வது) மட்டும் பந்து செயலிழந்து விடாது. அப்படிச் செய்தால் வீரர்கள் வேண்டுமென்றே மோதல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. சட்டம் வங்கதேசத்திற்குச் சாதகமாக இருந்தாலும், விளையாட்டு உணர்வு (ஸ்போர்ட்ஸ் மேன்) அடிப்படையில் அந்த அப்பீலை வங்கதேச கேப்டன் மிராஸ் திரும்பப் பெற்றிருக்கலாம்” என எம்சிசி குறிப்பிட்டுள்ளது.
