games

img

விளையாட்டு

மரீன் சிலிச், அனீஸிமோவா அதிர்ச்சி தோல்வி

முன்னணி சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான மியாமி ஓபன் அமெரிக்காவின் புளோரிடா வில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி  செவ்வாயன்று அதிகாலை நடை பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில், தரவரிசை யில் இல்லாமல் களமிறங்கிய முன்னணி வீரரான குரோஷியாவின் மரீன் சிலிச், தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரே வை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, ஜுவ ரேவ் 4ஆவது சுற்றுக்குத் தகுதி பெற் றார். முன்னாள் கிராண்ட்ஸ்லாமான மரீன் சிலிச் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார்.  சின்னர் (இத்தாலி), தியாபோ (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்களும் 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றனர். பென்கிச் அபாரம் இந்திய நேரப்படி செவ்வாயன்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றை யர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை அனீ ஸிமோவா, தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் பெ ன்கிச்சை எதிர்கொண்டார். பென்கிச் சை விட அனீஸிமோவா அதிரடியாக விளையாடக் கூடியவர் என்ற நிலை யில், யாரும் எதிர்பாராத வகையில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, பென்கிச் காலிறுதிக்கு முன்னேறினார்.  சபலென்கா (பெலாரஸ்), ரைபகினா (கஜகஸ்தான்), பெஹுலா (அமெரிக்கா), கோகா கவுப் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும் காலி றுதிக்கு முன்னேறினர்.

ஐபிஎல் 2026 லக்னோ அணியின் வீரர்கள், பயிற்சியாளர் பட்டியல் வெளியீடு

19 ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் 28 அன்று தொடங்கு கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் லக்னோ அணி வீரர்கள், பயிற்சியாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முழு வீரர்கள் பட்டியல் : ரிஷப் பண்ட் (கேப்டன்), எய்டன் மார்க்ராம், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீ ட்ஸ்கே, முகுல் சவுத்ரி, ரகுவன்ஷி, ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, அர்ஷின் குல்கர்னி, வனிந்து ஹசரங்கா ஆயுஷ் பதோனி, முகமது ஷமி, அவேஷ் கான், எம். சித்தார்த், திக் வேஷ் சிங், ஆகாஷ் சிங், பிரின்ஸ் யாதவ், அர்ஜுன் தெண்டுல்கர், நோர்கி யா, நமன் திவாரி, மயங்க் யாதவ், மொஹ்சின் கான். பயிற்சியாளர்கள் பட்டியல் : தலைமைப் பயிற்சியாளர்: ஜஸ்டின் லாங்கர் (ஆஸி.,) ஆலோசகர்: ஜாகீர் கான் (இந்தியா) பந்துவீச்சு பயிற்சியாளர்: பரத் அருண் (இந்தியா) சிறப்பு ஆலோசகர்: கனே வில்லியம்சன் (நியூஸி.,) சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர்: கார்ல் குரோ (இங்கிலாந்து)  பீல்டிங் பயிற்சியாளர்: ஜாண்டி ரோட்ஸ் (தென் ஆப்பிரிக்கா) உரிமையாளர்: ஆர்பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (இந்தியா)

ஐபிஎல் : ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க நிறுவனம்
ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸை கால் சோமானி தலைமையிலான அமெரிக்க நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1.63 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.15,300 கோடி) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய-அமெரிக்கத் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளரான கால் சோமானி (IntraEdge, Truyo, Truyo.AI மற்றும் Academian ஆகியவற்றின் நிறுவனர்) இந்த தொகையை ரொக்கமாக செலுத்துவார் என்றும், வால்மார்ட் குடும்பத்தைச் சேர்ந்த ராப் வால்டன், ஹம்ப் குடும்பத்தினர் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய ஒப்பந்தமாகும். இதற்கு முன், கடந்த ஆண்டு டோரண்ட் குரூப் குஜராத் அணியின் 67% பங்குகளை ரூ.5,025 கோடிக்கு வாங்கியதே அதிகப்பட்ச தொகையாக இருந்தது.