ஏவுகணைகளுக்கு நடுவே கால்பந்து விளையாடும் இராக் இளைஞர்கள்
மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள நாடுகளில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த போர் பதற்றத்துக்கு இடையே ஈரானின் அண்டை நாடான, இராக் நாட்டின் இளைஞர்கள் வானில் பறக்கும் ஏவு கணைகளுக்கு இடையே கால்பந்து விளையாடும் வீடியோ வெளி யாகியுள்ளது. அந்த வீடியோவில், இரவு நேரத்தில் திறந்தவெளி மைதானத்தில் இராக் இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது 3 ஏவுகணைகள் மின்னல் வேகத்தில் வானில் அடுத்தடுத்து செல்கிறது. ஆனால் இதனை வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. ‘ஏவுகணையா! போயிட்டே இருக் கட்டும்! எங்களுக்கு பழகிருச்சுப்பா!’ என்று கூறுவது போல, ஏவுகணை களை கண்டுகொள்ளாமல் கால்பந்து மீது மட்டுமே கவனமாக இருக் கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி ஐபிஎல்-இல் இணைந்தால் கடும் நடவடிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எச்சரிக்கை
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போன்று, பாகிஸ்தா னில் ஆண்டுதோறும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்ற பெயரில் டி-20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொட ரின் 11ஆவது சீசன் மார்ச் 26ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பிஎஸ்எல் மற்றும் ஐபிஎல் தொடர்கள் ஒரே நேரத்தில் நடை பெற உள்ளன. இத்தகைய சூழலில், இலங்கை வீரர் தசுன் ஷனகா பிஎஸ்எல் அணியான லாகூர் அணி யில் இருந்து விலகி, ராஜஸ்தான் அணி யில் காயமடைந்த சாம் கரணுக்குப் பதிலாக இணைந்துள்ளார். அதே போல, ஜிம்பாப்வே வீரர் பிளெசிங் முச ரபானி இஸ்லாமாபாத் அணியுட னான ஒப்பந்தத்திலிருந்து விலகி, கொல்கத்தா அணியில் இணைந்துள் ளார். இந்நிலையில், பிஎஸ்எல் தொட ரில் இருந்து கடைசி நேரத்தில் விலகி, ஐபிஎல் தொடரில் இணைய முடி வெடுக்கும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி எச்சரித் துள்ளார். இதுதொடர்பாக மொஹ்சின் நக்வி கூறுகையில்,”விதிமுறைகளின்படி ஐபிஎல் தொடரில் இணைந்த வீரர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம். கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது (கார்பின் போஷ் என்ற தென் ஆப்பிரிக்கா வீரருக்கு ஓராண்டு தடை - பிஎஸ்எல் மட்டும்). இந்த முறையும் அதுவே நடக்கும். வீரர்கள் அங்கு சென்றாலும், மிகச் சிறந்த வீரர்கள் இங்கும் வரு கிறார்கள். இதற்காக பிஎஸ்எல் தொட ரை ஒத்திவைக்க முடியாது. ஏனெனில் ஆண்டு முழுவதும் எங்களுக்கு வேறு கால இடைவெளி இல்லை” என அவர் கூறினார்.
மொஹ்சின் நக்வியின் எச்சரிக்கை பாதிப்பை
ஏற்படுத்தாது பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், பிஎஸ்எல் தொடரில் பங்கேற்க முடியாமல் தடை விதித்து, அதன்மூலமாக மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். மற்றபடி வேறொன்றும் செய்ய முடியாது. அதே போல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியின் இந்த மிரட்டல் கலந்த எச்சரிக்கை, விலகிய மற்றும் விலகப் போகும் வீரர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.
