தேசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போல் வால்ட் பிரிவில் தமிழ்நாடு அசத்தல்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது தேசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் 2026 (National Indoor Athletics Championships 2026) தொடரின் போல் வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்) பிரிவில் தமிழ்நாடு அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. மகளிருக்கான போல் வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் உயரத்தைத் தாண்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார் பரணிகா இளங்கோவன். அதேபோல ஆடவர் போல் வால்ட் பிரிவில் 5.30 மீட்டர் உயரத்தைத் தாண்டி சி. ரீகன் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தார்.
மியாமி ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் சபலென்கா
முன்னணி சர்வதேச டென் னிஸ் போட்டிகளில் ஒன் றான மியாமி ஓபன் அமெரிக்காவின் புளோ ரிடாவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி வியாழனன்று அதி காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், தரவரி சையில் முதலிடத்தில் உள்ள பெலா ரசின் சபலென்கா, தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் ஹெய்லீ யை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சபலென்கா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். டாமி பவுல் அதிர்ச்சி தோல்வி ஆடவர் ஒற்றையர் பிரிவு காலி றுதி ஆட்டத்தில் தரவரிசையில் 22ஆவது இடத்தில் அமெரிக்காவின் டாமி பவுல், தரவரிசையில் 28ஆவது இடத்தில் உள்ள பிரான்சின் ஆர்தர் பிளிஸை எதிர்கொண்டார். ஆர்தர் பிளிஸை விட டாமி பவுல் அதிரடி மற்றும் அனுபவத்திற்கு பெயர் பெற்றவர். இத்தகைய சூழலில், 7-6 (7-3), 6-7 (4-7), 6-7 (6-8) என்ற கணக்கில் டாமி பவுல் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். ஆர்தர் பிளிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். அதே போல தரவரிசையில் 21ஆவது இடத்தில் உள்ள செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா, தரவரிசையில் இல்லாத ஸ்பெயின் நாட்டின் மார்டினை 7-6 (7-1), 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை யிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
