games

img

விளையாட்டு

பெண்கள் பிரிவில் பங்கேற்க திருநங்கைகளுக்குத் தடை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வியாழனன்று திருநங்கை கள் (Transgender women) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்து புதிய அறிவிப்பை வெளியிட்டது.  இதுதொடர்பான அறிவிப்பில், “ஆண்களாகப் பிறப்பவர்களுக்கு வலிமை, வேகம் மற்றும் சகிப்புத் தன்மை ஆகியவற்றில் இயற்கையா கவே கூடுதல் உடல் நன்மைகள் உள்ளன. கருவில் இருக்கும்போது, குழந்தைப் பருவத்தில் மற்றும் பருவ மடையும் போது ஆண்களுக்கு டெஸ் டோஸ்டிரோன் அளவு மூன்று முறை உச்சத்தை எட்டுகிறது. இது அவர் களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் கூடுதல் செயல்திறன் நன்மைகளை வழங்குகிறது. ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவில் பங்கேற்க ‘உயிரியல் ரீதியான பெண்கள்’ மட்டுமே அனுமதிக்கப்படு வர். இது ஒருமுறை செய்யப்படும் ‘எஸ்ஆர்ஒய் மரபணு பரிசோதனை (SRY gene screening)’ அடிப்படை யில் தீர்மானிக்கப்படும். இந்த விதி முறை ஜூலை 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) ஒலிம்பிக் தொடர் முதல் அமலுக்கு வரும். எனினும் அடிமட்ட அளவிலான அல்லது பொழுது போக்கு விளையாட்டுத் திட்டங் களுக்குப் பொருந்தாது” என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வ தேச ஒலிம்பிக் கமிட்டி தேர்தலில் தலைவராகப் பொறுப்பேற்ற கிர்ஸ்டி  கோவென்ட்ரி (ஒலிம்பிக் அமைப்பின் 132 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் தலைவர்), பெண்கள் பிரிவைப் பாதுகாப்பதே தனது முக்கிய இலக்கு என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெண்கள் பிரிவில் பங்கேற்க திரு நங்கைகளுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. கடும் எதிர்ப்பு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முடிவுக்கு திருநங்கைகளுக்கான உரிமை அமைப்புகள் மற்றும் சில மனித உரிமை ஆர்வலர்கள்,”இது ஒதுக்கல் நடவடிக்கை ஆகும். விளை யாட்டில் ஈடுபடுவது ஒவ்வொரு மனி தனின் அடிப்படை உரிமை என்று  ஒலிம்பிக் சாசனமே கூறும் நிலையில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தடுப்பது அந்தச் சாசனத்திற்கு எதிரானது” என கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே போல,”திருநங்கைகள் தங்களை பெண்களாகவே அடை யாளப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களை மரபணுப் பரிசோதனை மூலம் தடுப்பது அவர்களின் கண்ணி யத்தைப் பாதிக்கும் செயல்” என்று  எல்ஜிபிடிக்யூ (LGBTQ+) ஆதர வாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  

ரியல் மாட்ரிட் மருத்துவர்கள் மாப்பேவிற்கு தவறான சிகிச்சை அளித்தார்களா? நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையாக உருவெடுக்கும் அபாயம்

​​​​​​கால்பந்து உலகின் முக்கிய நட்சத்திர வீரர் களில் ஒருவரும், பிரான்ஸ் நாட்டின் தேசிய அணியின் வீரருமான கிலியான் மாப்பே, தற்போது ஸ்பெயின் நாட்டின் கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக் காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டின் இறுதியில் மாப்பேவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்ட போது, ரியல் மாட்ரிட் நிர்வாகம் தவறான பரி சோதனையுடன் கூடிய சிகிச்சை அளித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த தகவலை ரியல் மாட்ரிட் வீரர்கள் தான் கூறியதாக ஸ்பெயின் நாட்டின் ஊடகங்கள் கூறின. இந்நிலையில், பிரேசில் அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாப்பே கூறு கையில், “எனது முழங்காலில் தவறான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அளித்ததாக வந்த அறிக்கை முற்றிலும் தவறானது. இந்தச் சூழலுக்கு ஒருவேளை மறை முகமாக நானே காரணமாக இருக்க லாம். ஏனெனில், என்ன நடக்கிறது என்பதை நாம் முறையாகத் தெரி விக்காதபோது, அது மற்றவர் களின் தவறான புரிதலுக்கு வழி வகுத்துவிடுகிறது” என அவர் மறுப்பு தெரிவித்தார். தனக்கு தவறான சிகிச்சை அளிக்க வில்லை என மாப்பேவே கூறினாலும், இந்த சம்பவத்திற்கு பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் அதிருப்தி தெரி வித்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. அதே போல தனிப்பட்ட வீரர்கள் பிரச்சனையை பெரிய விஷய மாக மாற்ற வேண்டாம் என ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாப்பே விவகாரம் நாடு களுக்கு இடையேயான பிரச்சனை யாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.