games

img

இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி -  நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சம் விலகல் 

இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனைதொடர்ந்து இந்திய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி நேற்று இந்தியா வருகை தந்தது. முதல் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளிலிருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். ஏனென்றால் கான்பூரில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில், இந்தியாவுக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலிருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.  இதன்படி நாளை தொடங்கும் டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தில் டிம் சவுதி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணியில் டாட் ஆஸ்டில், டிரெண்ட் போல்ட்,  மார்க் சாப்மேன், லாக்கி பெர்குசன், மார்ட்டின் குப்டில், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ்,  மிட்செல் சான்ட்னர்,  டிம் சீஃபர்ட், இஷ் சோதி,  டிம் சவுதி ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.