games

img

விளையாட்டு

சாம்போ கபடி சாம்பியன்ஷிப் காங்கோ இந்தியாவுக்கு கோப்பை

ஆப்பிரிக்கா நாடான காங்கோ ஜனநாயகக் குடியர சின் தலைநகர் கின்ஷாஸாவில் 3ஆவது சாம்போ சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. ரஷ்ய தற்காப்பு கலை சார்ந்த ‘சாம்போ’ விளை யாட்டுப் போட்டிகளில், இந்த ஆண்டு முதல் முறையாக கபடி கவுரவ விளையாட்டாக அறிமுகப்படுத்தப் பட்டது. இந்திய விளையாட்டான கபடி விளையாட்டு அங்குள்ள மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது.  மற்ற போட்டிகளைப் போல கபடி போட்டியையும் காங்கோ நாட்டு மக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர்; அரங்கு நிறைந்தது. இறுதிப் போட்டியில் இந்திய வம்சாவளியினரைக் கொண்ட காங்கோ இந்தியன்ஸ் - காங்கோ தேசிய அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் காங்கோ இந்தி யன்ஸ் அணி 41 - 33 என்ற புள்ளிக் கணக்கில், காங்கோ தேசிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சர்வதேச அளவில் கபடி விளையாட்டு இது போன்று வளர்ந்து வருவது இந்தியா விற்கு பெருமையான விஷயம் என நெட்டிசன்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

சஞ்சு சாம்சனை பாராட்ட கம்பீருக்கு இவ்வளவு தயக்கம் ஏன்?

10ஆவது சீசன் டி-20  உலகக்கோப்பை கிரிக்கெட்  தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ளது. இறுதி ஆட்டத்தில் இந்தியா  - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை  நடத்துகின்றன. இந்த ஆட்டம் குஜ ராத்தில் ஞாயிறன்று நடைபெறுகிறது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதி வரை முன்னேற ஒரே காரண மாக இருந்த தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை புறக்கணிக்கும் வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் செயல்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  சஞ்சு சாம்சன் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் (மே.இ. தீவு களுக்கு எதிராக) இக்கட்டான சூழ்நிலையில் 50 பந்துகளுக்கு 97 ரன்கள் விளாசி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற பெருமைக்கு உரியவர். அதே போல வியாழனன்று நடைபெற்ற அரை யிறுதியில் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்தும், இந்திய அணியின் வெற்றி யை பறிக்க ருத்ரதாண்டவம் ஆடிய இங்கிலாந்து வீரர் பெத்தேலை அசத்தலாக ஸ்டெம்பிங் (ரன் அவுட்) செய்தும் இறுதிக்கு அழைத்துச் சென்றவர் சஞ்சு சாம்சன் தான்.  பெத்தேல் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்திருந்தால் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளி யேறி இருக்கும் என்ற சூழலில், கேர ளத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சனை பாராட்ட முன்னாள் பாஜக எம்.பி.,யான  கம்பீர் மிகவும் தயக்கம் காட்டுகிறார். இது ஏன் என்று தெரியவில்லை.  மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதி ரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்திற்குப் பின்பு,”ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகள் சஞ்சு சாம்சன் அடித்த 97 ரன்களுக்கு இணையான முக்கி யத்துவம் வாய்ந்தவை. அது நடக்கா மல் இருந்திருந்தால் நீங்கள் சஞ்ச சாம்சன் பற்றி பேசியிருக்கவே மாட்டீ ர்கள். இது போன்ற சிறிய பங்களிப்பு கள்தான் அணி வெற்றிபெற உதவுகின்றன” என பேசினார்.  அதே போல அரையிறுதி போட்டிக்குப் பின்னர் சஞ்சு சாம்சனை பற்றி கம்பீர் பெரியளவில் பேச வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் - இறுதி ஆட்டம்

இந்தியா - நியூஸிலாந்து

நாள் : மார்ச் 8 - ஞாயிறு/நேரம்: இரவு 7:00 மணி இடம்: கொல்கத்தா, மேற்கு வங்கம் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)