games

img

விளையாட்டு

தேசிய சீனியர் மகளிர் கபடி போட்டி ஜன., 18 முதல் தமிழ்நாடு அணியின் பயிற்சி முகாம்

மகளிருக்கான 72ஆவது தேசிய சீனியர் கபடி போட்டி ஜன., 27 அன்று தெலுங்கானா மாநிலம் கச்சி பவுலி உள்ளரங்க மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இருக்கும் தமிழ்நாடு அணிக்கான பயிற்சி முகாம் ஜன., 18ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த தொடருக்கான தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக சென்னையைச் சேர்ந்த கோகுல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வீரர் ஜமான் கானின்  பந்துவீச்சுக்கு எதிர்ப்பு

இலங்கை கிரிக்கெட் ஜாம்ப வான் லசித் மலிங்கா “ஸ்லிங்கி (சைட்-ஆர்ம் :  பந்து கையை விட்டு வெளியேறும் போது தலைக்கு மேல் அல்லாமல், நெஞ்சுக்கு கீழே தாழ்வான கோணத் தில் செல்லும்)” வகை பந்துவீச்சில் கொடிகட்டிப் பறந்தவர். இத்தகைய பந்துவீச்சு முறை துல்லியமான “யார்க்கர்” பந்துகளை வீசுவதற்கு மிக வும் வசதியாக இருக்கும் என்ற நிலை யில், மலிங்காவைப் போலவே பாகிஸ்தான் வீரர் ஜமான் கானும் பந்து வீசி வருகிறார். இவரை ரசிகர்கள் (பாகிஸ்தான் மட்டும்) “பாகிஸ்தான் மலிங்கா” என்று அழைக்கிறார்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியா வின் “பிக் பேஷ் லீக் (உள்ளூர் டி-20)” தொடரில் பிரிஸ்பேன் அணிக்காக விளையாடி வரும் ஜமான் கான் பந்துவீச்சு தொடர்பாக புகார் கிளம்பி யுள்ளது. சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர், ஜமான் கானின் பந்துவீச்சு முறை குறித்து நடுவர்களிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நடுவரிடம் அவர் அளித்த புகாரில், “பந்துவீசும் போது ஜமான் கானின் கை மிகவும் தாழ்வாக உள்ளது. இது  4 வயது குழந்தை பந்து வீசுவதைப் போல இருக்கிறது” என வார்னர் கூறியதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. ஜமான் கானின் பந்துவீச்சு தொடர்பாக வார்னர் போன்ற மூத்த வீரர்கள் கேள்வி எழுப்பினாலும்; புகார் அளித்தாலும், நடுவர்கள் மனம் வைத்தால் மட்டுமே இந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) கவனத்திற்கு செல்லும். ஐசிசி புகாரை ஏற்றுக்கொண்டால் பாகிஸ்தான் வீரர் ஜமான் கானின் பந்து வீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியை போல கோலியை கொண்டாடும் ரசிகர்கள்

ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை வெல்லும் அணியின் கொண்டாட்டத்தை விட ஒரு முக்கிய நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். சீசன் முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் அந்த ஒரு நிகழ்வை பற்றிதான் பேசிக்கொண்டே இருப்பார்கள்; புகழ்ந்து கொண்டும் இருப்பார்கள். அந்நிகழ்வு என்னவென்றால், சென்னை அணிக்காக பேட்டிங் செய்ய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி களமிறங்கும் போது, ரசிகர்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பு தான் அது. அவர் எந்த மைதானத்தில் களமிறங்குகிறாரோ, அந்த மைதானத்தின் பெவிலியன் குலுங்கும் அளவிற்கு ரசிகர்கள் உற்சாகக்குரல் இருக்கும். இது எங்களுக்கு கிடைக்கவில்லையே என மற்ற கிரிக்கெட் வீரர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தோனியைப் போல விராட் கோலியையும் ரசிகர்கள் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஞாயிறன்று குஜராத் மாநிலம் வதோராவில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, கோலிக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதனால் வதோரா மைதானமே குலுங்கியது. இதனை கோலியே ஒப்புக்கொண்டுவிட்டார். இதுதொடர்பாக கோலி கூறுகையில்,”தோனி களமிறங்கும் போதும் இதே மாதிரி நடந்ததை பார்த்திருக்கிறேன். ரசிகர்கள் உற்சாகமடைவது புரிகிறது.  எனினும் நான் என் கவனத்தை ஆட்டத்தில் மட்டும் வைத்துக் கொள்கிறேன்” என அவர் கூறினார்.