பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் கூனே மரணம்
பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற செல்டிக் சூப்பர் வெதர்வெயிட் குத்துச்சண்டை தொடரின் ரவுண்ட் ஆப் சுற்றில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாதன் ஹோவெல்ஸ், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் கூனே ஆகிய இருவரும் மோதினர். இந்த ஆட்டத்தின் 9ஆவது சுற்றில் நாதன் ஹோவெல்ஸின் பஞ்ச்களை (குத்துக்களை) சமாளிக்க முடியாமல் படுகாயமடைந்த ஜான் கூனே அதிர்ச்சி தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறினார். வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ் டில் உள்ள ராயல் மருத்துவமனையின் அவசர சிகிசை பிரிவில் கடந்த 8 நாட் களாக சிகிச்சை பெற்று வந்தார். நாதன் ஹோவெல்ஸின் அபாயகரமான பஞ்சுக் களால் அவரது தலைக்குள் ஏற்பட்ட ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பிப்ர வரி 8ஆம் தேதி ஜான் கூனே சிகிச்சை பல னின்றி மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கு ஏராளமான குத்துச்சண்டை மற்றும் விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வரு கின்றனர். 28 வயதிலேயே மரணம் ஜான் கூனே தலைசிறந்த குத்துச் சண்டை வீரர்களில் ஒருவர் ஆவார். கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில் குத்துச்சண்டை வீரர் லியாம் கய்னோர் க்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று செல்டிக் பட்டத்தை கைப்பற்றி வர லாறு படைத்தவர். அதன் பின்னர் தனது கையில் ஏற்பட்ட காயத்தினால் சுமார் ஓராண்டு காலம் போட்டிகளி லிருந்து விலகியிருந்தார். கடந்த 2024 அக்டோபரில் மீண்டும் போட்டியிட்டு தான்சானியா நாட்டைச் சேர்ந்த டம்பேலாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றார். ஆனால் இங்கி லாந்து நாட்டைச் சேர்ந்த நாதன் ஹோ வெல்ஸின் பஞ்ச்களை (குத்துக்களை) முன்கூட்டியே கணிக்காமல் படுகாய மடைந்து ஜான் கூனே உயிழந்துள் ளார். அதுவும் வெறும் 28 வயதிலேயே.
மண்டை ஓடு சிதறியது
செல்டிக் சூப்பர் வெதர்வெயிட் தொடர் தலைக்கவசம் இல்லாமல் விளையாடும் பிரிவு ஆகும். ஜான் கூனேவிற்கு எதிராக நாதன் ஹோவெல்ஸ் தொடுத்த பஞ்ச் (குத்து) மிகவும் ஆக்ரோஷமானது ஆகும். தலையில் மோசமான அதிர்வு ஏற்படும் அளவில் நாதன் ஹோவெல்ஸ் பஞ்ச் விட்டுள்ளார். இதனால் ஜான் கூனே சம்பவ இடத்திலேயே நிலை குலைந்தார். மருத்துவமனையில் ஜான் கூனேவின் ஸ்கேன் அறிக்கையில் மண்டை ஓடு சிதறியது எனக் கூறப்பட்டு இருந்தது. மண்டை ஓடு சிதறும் அளவிற்கு நாதன் ஹோவெல்ஸின் பஞ்ச்களை உள்வாங்கி 8 நாட்கள் சிகிச்சையுடன் உயிருக்கு போராடி, உயிரிழந்துள்ளார் ஜான் கூனே.
கிரிக்கெட்டிலும் சோகம்...
நியூஸிலாந்து வீரர் ரச்சின் படுகாயம்
பாகிஸ்தான் நாட்டில், பாகிஸ் தான் - நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் முத்த ரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வரு கிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதின. பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனினும் இந்த போட்டியில் சோகமான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது. 38ஆவது ஓவரில் பாகிஸ்தான் வீரர் குஷ்தில் அடித்த பந்தை கேட் பிடிக்க முயன்ற நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவிந்திரா விளக்கு ஒளியின் காரணமாக பந்தை சரி யாக கணிக்காமல் கையை கீழ் நோக்கி இறக்கிவிட்டார். இதனால் பந்து அவரது கைகளுக்கு மேலே சென்று நெற்றி யில் பலமாக தாக்கியது. இதனால் நிலை குலைந்த ரச்சின் அதே இடத்திலேயே அமர்ந்தபடி இருக்க, அவரது நெற்றியி லிருந்து அதிகமாக ரத்தம் வெளியேறியது. பின் உடனடியாக மைதானத்திலிருந்து ரச்சின் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். படு காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் ரச்சின், முத்தரப்பு தொடரில் இருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.