சென்னை,மார்ச்.26- மாணவர்களின் நியாயமான போராட்டத்தைத் தவறாக சித்தரிக்கும் ஊடகங்களுக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
சென்னை தரமணி தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை திசைதிருப்ப மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தவறாக சித்தரிக்கும் ஊடகங்களுக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் மாணவியின் வழக்கினை உண்மைத் தன்மையுடனும் உரியச் சட்டங்களுக்கேற்ப விசாரணை நடத்திடவும் தமிழ்நாடு அரசை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.