உலக ஏடிஏ பைனல்ஸ் டென்னிஸ் இத்தாலியின் சின்னர் அபார வெற்றி
உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டும் பங்கேற்கும், “உலக ஏடிஏ (ATA - Association of Tennis Professionals) பைனல்ஸ்” டென்னிஸ் தொடரின் 56ஆவது சீசன் ஐரோப்பா நாடான இத்தாலியின் டூரின் நகரில் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடரின் முதல் சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி செவ் வாயன்று அதிகாலை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள இத்தாலி யின் சின்னர், 8ஆவது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸை எதிர்கொண் டார். தொடக்கம் முதலே அதிரடி யாக விளையாடிய சின்னர் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் பெலிக்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி னார்.
சென்னை அணியில் சஞ்சு சாம்சன்?
ஐபிஎல் தொடரில் 2026ஆம் ஆண்டுக்கான வீரர்கள் பரிமாற்றம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் செல்வதும், அதற்கு ஈடாக சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்து வது போல சென்னை அணி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் இதுவரை இல்லாத வகையில் சஞ்சு சாம்சனிற்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளது.
பிக் பாயிண்ட் பல வருடங்களுக்குப் பிறகு
, தான் விளையாடிய பார்சிலோனா கால்பந்து கிளப் (ஸ்பெயின்) “ஹோம் மைதானத்தில் (தாய் மைதானம்)” நிற்கும் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி. பார்சிலோனா அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடிய மெஸ்ஸி, இந்த மைதானத்தில் மட்டும் 373 கோல்கள் அடித்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மெஸ்ஸி தற்போது அர்ஜெண்டினா மாற்று இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
