games

img

விளையாட்டு

உலக டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் சபலென்கா அதிர்ச்சி ; ரைபகினா சாம்பியன்

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் உலக டபிள்யூடிஏ (WTA - Women’s Tennis Association) பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் 54ஆவது சீசன்  அரபு நாடான சவூதி அரேபியாவின் ரியாத்தில் நவம்பர் 1ஆம் தேதி  தொடங்கியது. முன்னணி வீராங்கனை கள் மட்டும் பங்கேற்றதால் வழக்கம் போல இந்த தொடர் பரபரப்பாக நகர்ந்தது. இந்நிலையில், உலக டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி சனிக்கிழமை அன்று  நள்ளிரவு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனை யான சபலென்கா (பெலாரஸ்) - 6ஆவது இடத்தில் உள்ள ரைபகினா  (கஜகஸ்தான் - ரஷ்ய வாழ்) மோதி னார்கள். யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய  ரைபகினா 6-3, 7-6 (7-0) என்ற நேர் செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் இந்திய அணியில் இணைந்தார்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடி மகனாக மாறியதன் மூலம், இந்தியக் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.  கடந்த வாரம் ஐஎஸ்எல் தொடரில் பெங்களூரு எப்சி கால்பந்து கிளப்பின் பயிற்சி மையத்தில் நடைபெற்ற குடியுரிமை ஒப்படைப்பு விழாவில் இந்தியக் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, ரியான் வில்லியம்ஸிடம் அவ ரது புதிய இந்தியப் பாஸ்போர்ட்டை வழங்கினார்.  தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தேசிய அணி முகாமில் ஞாயிறன்று ரியான் வில்லியம்ஸ் முறைப்படி இந்திய அணியில் இணைந்துள்ளதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறி வித்தது. இதுதொடர்பாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “முன்னணி வீரர் ரியான் வில்லியம்ஸ் மற்றும் தடுப்பாட்ட வீரர் ஜெய் குப்தா (32 வயது பின்கள வீரர் - இந்தியா) ஆகியோர் பெங்களூருவில் உள்ள சீனியர் ஆண்கள் தேசிய அணி முகாமில் இணைந்துள்ளனர்” என அதில் கூறப்பட்டுள்ளது. ரியான் வில்லியம்ஸ் 30 வயதான நடுகள வீரரான ரியான் வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய நாட்டின் பெர்த் நகரில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்றா லும், இவரது தாயார் மும்பையைச் சேர்ந்த ஆங்கிலோ - இந்திய குடும் பத்தைச் சார்ந்தவர். மேலும் இவரது தாத்தா 1950களில் பம்பாய் (தற்போது மும்பை) அணிக்காகச் சந்தோஷ் கோப்பையில் ஆடியவர். ஆஸ்திரேலி யக் குடியுரிமையை விட்டுக் கொடுத்து பெங்களூரு கிளப்பில் முத லில் இணைந்தார். நட்சத்திர வீரர் சுனில் சேத்ரியின் பரிந்துரையால், வெளி நாட்டு வாழ் இந்திய வீரர்களுக்கான கொள்கை தளர்த்தப்பட்டு, தற்போது இந்திய தேசிய அணியிலும் இடம் பிடித்து விட்டார். அவரது குடும்பத்தி னர், பெங்களூரு எப்சி நிர்வாகம் மற்றும் கர்நாடக மாநிலக் கால்பந்து சங்கம் ஆகியவற்றின் உறுதியான ஆதரவுடன், ஒன்றிய அமைச்சக மட்டத் தில் இறுதி ஒப்புதல்கள் பெறப்பட் டன. அதன்பின் ரியான் வில்லியம்ஸ் இந்திய அணியில் இணைந்தார்.

பெங்கால் டென்னிஸ் சங்கத் தலைவராக லியாண்டர் பயஸ்

ஆண்கள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 18 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்  கடந்த மாதம் பெங்கால் டென்னிஸ் சங்கத்  தலைவராக தலைவராக ஒருமனதாக முன்மொழியப்பட்டார். தொடர்ந்து  சனிக்கிழமை அன்று நடைபெற்ற பெங்கால் டென்னிஸ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குப் பிறகு லியாண்டர் பயஸ் தலைவராகப் பொறுப்பேற்றார்.