இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.
இலங்கையில் டிட்வா புயல் காரணமாக கடுமையாம பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் வென்னப்புவவில் விபத்தில் சிக்கியது.
இதனையடுத்து, விமானி உள்ளிட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் விமானி நிர்மல் சியம்பலாபிட்டியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
