court

img

டிஜிட்டல் அரெஸ்ட் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் உள்ள டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடிகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஹரியானாவை சேர்ந்த முதிய தம்பதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது.
இன்று நடைபெற்ற விசாரணையில் டிஜிட்டல் கைது சம்பந்தமான வழக்குகள் குறித்து நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு (CBI) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
மேலும் விசாரணைக்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுமெனவும், விசாரணைக்குத் தேவையான உதவிகளை ரிசர்வ் வங்கி செய்ய வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது.
பெரும்பாலும் மூத்த குடிமக்களையே சைபர் கும்பல்கள் குறிவைத்து, அவர்களின் வாழ்நாள் சேமிப்புகளை மோசடி மூலம் பறித்து வருவதாக நீதிமன்றம் கடும் கவலை தெரிவித்துள்ளது.