court

img

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு!

உச்ச நீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றுக்கொண்டார். 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய்-இன் பதவிக் காலம் நேற்றுடன்(நவ.23) நிறைவடைந்தது. அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதிமுர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 2027 பிப்ரவரி 9ஆம் தேதி வரை சூர்யகாந்த் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பார் 
நீதிபதி சூர்யகாந்தின் பணி விவரங்கள்:
நீதிபதி சூர்யகாந்த் ஹரியானா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 1984ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். பின்னர் பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதியாகவும் பணியாற்றினார்.
கடந்த 2004ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார். அதன்பின் 2018 இல் இமாச்சல் உயர்ந்தீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2019இல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 30ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் உச்சந்தீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டார்.