business

img

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.10.50 குறைவு!

டிசம்பர் மாதத்தில், சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.10.50 குறைந்துள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.10.50 குறைந்து ரூ.1,739.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை தில்லியில் ரூ.1580.50க்கும், கொல்கத்தாவில் ரூ.1684க்கும், மும்பையில் ரூ.1531.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
அதே சமயம், சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் எவ்வித மாற்றமும் இன்றி, ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.