திருப்பத்தூர் அருக்கே நேற்று நடந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நேற்று 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000மும் நிவாரணமாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஒன்றிய அரசு சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
