games

img

வெற்றியின் சிற்பியாக அமோல் முஜும்தார்! - - சி.ஸ்ரீராமுலு

வெற்றியின் சிற்பியாக அமோல் முஜும்தார்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யின் சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளி மைதானத்தில் சச்சின்-வினோத் காம்ப்ளி 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வரலாற்று நாளில், பெவிலியனில் ஒரு சிறுவன் பேட்களைக் கால்களில் கட்டிக் கொண்டு நாள் முழுவதும் காத்தி ருந்தான். அவனுக்கு ஒரு பந்து கூட விளையாட வாய்ப்பு கிடைக்க வில்லை. அந்த மாணவர் தான் அமோல் முஜும்தார். அந்தச் சம்பவம் அவருடைய வாழ்க்கையின் சின்னப் பிரதிபலிப்பாக மாறியது. மறைக்கப்பட்ட ரத்தினம்  1974 நவம்பர் 11ஆம் தேதி மும்பை யில் பிறந்த அமோல் முஜும்தார், கிரிக்கெட்டின் மீது தீராக் காதல் கொண்ட சிறுவனாக வளர்ந்தார். அவரது தந்தை அனில் முஜும்தார் ஒரு  வங்கி ஊழியர், தொழில்முறை உள்ளூர் கிரிக்கெட் வீரர். மகனின் கனவை நன வாக்க அவரை புகழ்பெற்ற பயிற்சி யாளர் ரமாகாந்த் அச்ரேகரிடம் சேர்த்தார். சச்சின் தெண்டுல்கரை உரு வாக்கிய அதே குருநாதர் அவர். 19 வய தில் ரஞ்சி அறிமுகத்திலேயே 260 ரன்கள் குவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.மும்பையில் இருந்து எழும் அடுத்த பேட்டிங் ‘மாஸ்ட்ரோ’ இவர்தான் என்று கிரிக்கெட் உலகம் முழக்கமிட்டது. ஆனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகவும் வினோத மான, மறக்கப்பட்ட வீரர் என்ற பட்டத்தை அவர் சுமக்க நேர்ந்தது. சாதனைகள் நிறைந்த பயணம் வலது கை பேட்ஸ்மேனான அமோல், 1994 முதல் 2013 வரை நீண்ட  20 ஆண்டுகள் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது திறமையை நிலைநாட்டினார். மும்பை, அசாம், ஆந்திரா அணி களுக்காக 171 முதல் தர போட்டிகளில் விளையாடி, 48.13 சராசரியுடன் 11,167 ரன்கள் குவித்தார். 30 சதங்கள், 60  அரை சதங்கள் என அவரது சாதனை கள் பிரமிக்க வைப்பவை. ஆனால் விநோதம் என்ன வென்றால், இவ்வளவு சிறப்பான செயல் திறன் இருந்தும், சச்சின், கங்குலி, டிரா விட்டுடன் விளையாடியவருக்கு, இந்திய இளையோர் துணைக் கேப்டனாக இருந்தவருக்கு, இந்திய தேசிய அணியில் ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. திறமை மட்டும் போதாது, சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது. இரண்டாவது இன்னிங்ஸ் 2014இல் ஓய்வு பெற்ற அமோல், தனது அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு அளிக்க முடிவு செய்தார். இந்திய இளையோர் பேட்டிங்  பயிற்சியாளர், நெதர்லாந்து நாட்டின் ஆலோசகர், ராஜஸ்தான் ராயல்ஸ் (ஐபிஎல்) பயிற்சியாளர், தென் ஆப்பிரிக்க இடைக்கால பயிற்சியாளர் என பல பொறுப்புகள் வகித்தார். களத்தில் கிடைக்காத அங்கீகாரத்தை பயிற்சியாளராக தேடவில்லை. தான் அடையாத உயரத்தை மற்றவர்கள் அடைய உதவுவதில் இன்பம் கண்டார். உலக சாம்பியன் பயிற்சியாளர் 2023இல் பிசிசிஐ அவரை இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சி யாளராக நியமித்தது. இது திருப்பு முனையானது. நெடுநாட்களாக உல கக்கோப்பையை துரத்திய இந்திய மகளிர் அணி, இம்முறை அமோலின் வழிகாட்டுதலில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் கடைசி கேட்ச் வீழ்ந்தபோது, ஹர்மன்பிரீத் கவுர்  அமோலை நோக்கி ஓடி, அவரது கால் களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். பின்னர் அவரைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியில் விம்மி அழுதார். “அடுத்த ஐந்து நிமிடம் எல்லாமே மங்கலாகி விட்டது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இந்த தருணம் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடி யாத நினைவாக இருக்கும்” என்று அவர் உருக்கமாகப் பகிர்ந்தார். கபில் தேவின் பிறகு இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று  தந்த பயிற்சியாளர்களில் மூன்றாவ தாக அவர் இருக்கிறார். வெற்றியின் உண்மை அமோல் முஜும்தாரின் கதை காத்திருப்பின் வலிமையை, கனவு களை கைவிடாத உறுதியை, வெற்றி பல வடிவங்களில் வரும் என்பதையும் உணர்த்துகிறது. இந்திய அணிக்காக விளையாட அன்று வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இன்று அவரது பெயர் இந்திய கிரிக்கெட் வர லாற்றில் பொன்னெழுத்துக்களால் பதி வாகியிருக்கிறது - வீரனாக அல்ல, வெற்றியின் சிற்பியாக. வெற்றியின் மறுபக்கம் எப்போதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டதாக இருப்பதில்லை. அங்கு கண்ணீ ரும், ஏமாற்றங்களும், தோல்விகளும் இருக்கும். ஆனால் அவற்றையெல் லாம் தாண்டி வரும் வெற்றியின் இனிமை, எல்லா வலிகளையும் மறக்க வைத்துவிடும். அமோல் முஜும்தாரின் கதை இதை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது. - சி.ஸ்ரீராமுலு