கொடிகள் மூலம் அடாவடி ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரங்களை ‘வளைக்க’ அமெரிக்கா சதி?
உக்ரைன் - ரஷ்யா இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக ரஷ்யா, பெலாரஸ் (ரஷ்யா வின் நட்பு நாடு) நாடுகளின் கொடிகள் கடந்த 2 ஆண்டுகளாக விளையாட்டு உலகில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன. அதாவது ஸ்கோர் கார்டு, விளையாட்டு மைதானம், சாம்பியன்ஸ் கோப்பை வழங்கும் இடத்தில் ரஷ்யா, பெலாரஸ் கொடிகள் தவிர்க்கப்பட்டு வந்தன. வெறும் ஒரு வாரம் இந்நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் டென்னிஸ் தொடராக கருதப்படும் பிரிஸ்பேன் (ஆஸ்தி ரேலியா) ஓபன் டென்னிஸ் போட்டி யில் ரஷ்யா, பெலாரஸ் கொடிகள் கூகுள் உள்ளிட்ட ஸ்கோர் கார்டு (கூகுள் உட்பட) பகுதியில் சேர்க்கப்பட்டன. ஆனால் மைதானம், சாம்பியன்ஸ் கோப்பை வழங்கும் நிகழ்வுகளில் ரஷ்யா, பெலாரஸ் கொடிகள் இருந்தது தொடர்பாக செய்திகள் வெளியாக வில்லை. எனினும் இந்த மாற்றம் ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பின்னர், தற்போது நடை பெற்று வரும் ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் நாளில் (ஜன., 18 அன்று) மட்டுமே கூகுள் உள்ளிட்ட வலைத்தளத்தில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டின் கொடிகள் இருந்தன. ஆனால் அடுத்த ஒரே நாளில் வீரர், வீராங்க னைகளின் பட்டியலில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டின் கொடிகள் இல்லை. இதுதொடர்பாக கூகுள் இது வரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. வீரர், வீராங்கனைகள் வளைக்க டென்னிஸில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டின் வீரர், வீராங்கனைகள் மிகவும் நன்றாக விளையாடக் கூடியவர்கள். உயரத்திற்கு ஏற்ப அதிரடி ஷாட்கள், அனல்பறக்கும் சர்வீஸ், போராட்ட குணம் என டென்னிஸ் உலகை மிரட்டும் அசாத்திய திறமை உள்ள வர்கள். இதனால் ரஷ்யா, பெலாரஸ் நாட்டின் வீரர், வீராங்கனைகளிடம் போட்டி என்றால் பிற நாட்டு வீராங்கனைகள் கலக்கத்துடன் தான் களமிறங்குவார்கள். இரு நாட்டிற்கும் டென்னிஸ் உலகில் இவ்வளவு சிறப்பு உள்ள சூழலில், அந்நாடுகளின் வீரர் - வீராங்கனைகளை கொடிகள் மூலம் தங்கள் பக்கம் வளைக்க அடாவடியில் இறங்கியுள்ளது. கொடிகள் நீக்கம் காரணமாக ரஷ்யா, பெலாரஸ் நாட்டின் பல முன்னணி வீராங்கனைகள் பல்வேறு நாடுகளுக்கு சென்று, வேறு நாட்டின் குடியுரிமையுடன் விளையாடி வரும் நிலையில், ரஷ்யாவின் முன் னணி நட்சத்திரமான அனிஸ்மோவா அமெரிக்க குடியுரிமையுடன் அந்நாட்டிற்காக விளையாட துவங்கி யுள்ளார். பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் அனிஸ்மோவா அமெரிக்க கொடியுடன் களமிறங்கினார். இதே போல கொடிகளை தொடர்ந்து நீக்கி வைத்து ரஷ்யா, பெலாரஸ் நாட்டின் வீரர், வீராங்கனைகளை அமெரிக்கா தங்கள் பக்கம் வளைக்க திட்ட மிட்டுள்ளதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
கொடியை நீக்க உத்தரவிட்டது யார்?
2026ஆம் ஆண்டின் தொடக்க நிகழ்வோ அல்லது ஆஸ்திரேலிய நாட்டின் நல்லெண்ண முயற்சியோ டென்னிஸ் உலகில் ரஷ்யா, பெலாரஸ் நாடுகளின் கொடிகள் மீண்டும் சேர்க்கப்பட்டது வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் ஒரே வாரத்தில் கொடிகளை நீக்க உத்தரவிட்டது யார்? அமெரிக்க அரசாங்கமா? அல்லது கூகுளின் தன்னிச்சையான முடிவா? என கேள்விகள் கிளம்பியுள்ளன.
ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இணைந்தது ‘கூகுள் ஜெமினி’
கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர் தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்களில் ஒன்றாக கூகுள் நிறுவனத்தின் ஏஐ பிரிவான ஜெமினி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ. 270 கோடி மதிப்பில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதே போல மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கு கூகுள் ஜெமினியின் போட்டியாளரான சாட் ஜிபிடி ஸ்பான்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
