மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் 6ஆவது சீசன் ஜனவரி 6ஆம் தேதி அந்நாட்டின் தலை நகர் கோலாலம்பூரில் தொடங்கியது. உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங் கள் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் 2ஆவது காலிறுதி ஆட்டத் தில் இந்தியாவின் நட்சத்திர வீராங் கனை பி.வி.சிந்து, நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் யமாகுச்சி யை எதிர்கொண்டார். இந்த ஆட்டத் தில் முதல் செட்டை பிவி சிந்து 21-11 என கைப்பற்றினார். அடுத்த செட் விளை யாடுவதற்கு முன்பு காயம் காரண மாக ஜப்பானின் யமாகுச்சி போட்டி யில் இருந்து விலகுவதாக அறிவித் தார். இதனையடுத்து பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சபலென்கா ; ரைபாகினா அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலியா ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப் படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையான பெலாரசின் சபலென்கா தனது காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மேடிசன் கீஸை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலா, இத்தாலி யின் சம்சோனோவை எதிர்கொண் டார். 6-3, 7(7) - 6(3) என்ற நேர் செட் கணக்கில் பெகுலா அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி னார். தரவரிசையில் 3ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் ரைபாகினா தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள செக் குடியரசின் முச்சோவாவை எதிர்கொண்டார். 2-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் ரைபாகினாவை வீழ்த்தி முச்சோவா அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
“என் வழி தனி வழி” நியூஸிலாந்து கிரிக்கெட் அணியில் தமிழர்
3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளை யாட நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் தொடக்க நிகழ்வான முதல் ஒருநாள் போட்டி ஜன., 11 அன்று குஜராத் மாநிலம் வதோரா வில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான நியூஸி லாந்து அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட வர். வேலூரில் பிறந்த அவருக்கு 4 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் நியூஸிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்தது. அவரது உறவினர் கள் வேலூரில் தான் வசித்து வரு கிறார்கள். கடந்த ஆண்டு சென்னைக்கு வந்து சிஎஸ்கே (ஐபிஎல் சென்னை அணிக்கு சொந்தமானது) அகாடமியில் சில வாரங்கள் பயிற்சி யில் ஈடுபட்ட அவர் ஒருநாள் தொட ரில் சாதிக்க ஆர்வமுடன் உள்ளார். இந்தியா வந்த பின்பு செய்தியாளர் களிடம் பேசிய ஆதித்யா அசோக், “அதிர்ஷ்டவசமாக சென்னைக்கு வந்து பயிற்சி எடுக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த பயிற்சியின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக இங்குள்ள கரிசல் மண், செம்மண் போன்ற ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுவது என்பதை அறிந்து கொண்டேன். அந்த அனுபவம் ஒருநாள் தொடரில் மிகவும் உதவிகர மாக இருக்கும் என்று நம்புகிறேன்” என அவர் கூறினார். ரஜினி ரசிகர் 23 வயதான ஆதித்யா அசோக் இதுவரை 2 ஒருநாள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடியுள்ளார். அவர் தமிழ் சினிமாவில் பிரபலமான ‘என் வழி தனி வழி’ (படையப்பா திரைப்படம் - ரஜினி) என்ற வசனத்தை கையில் பச்சை குத்தி யிருப்பதும் கவனிக்கத்தக்கது.
