சிட்னி டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றி ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரின் 2025-26ஆம் ஆண்டுக்கான சீசன் ஆஸ்திரேலியாவில் 2025ஆம் ஆண்டு நவ., 21 அன்று தொடங்கியது. முதல் 4 போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. சம்பிரதாய போட்டியான, 5ஆவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி அனுபவ வீரர் ஜோ ரூட்டின் (160 ரன்கள்) அபார சதத்தின் உதவியால் முதல் இன்னிங்ஸில் 97.3 ஓவர்களில் 384 ரன்களுக்கு ஆட்டமி ழந்தது. ஹெட் (163 ரன்கள்), கேப்டன் ஸ்மித் (138 ரன்கள்) ஆகியோரின் அசத்தலான சதத்தால் ஆஸ்திரேலிய அணி 133.5 ஓவர்களில் 567 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 183 ரன்கள் பின்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் (154 ரன்கள்) சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்ட இங்கிலாந்து அணி 88.2 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்து, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 160 ரன்கள் நிர்ணயம் செய்தது. எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 31.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை (161 ரன்கள்) எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது.
35ஆவது முறையாக...
2025-26ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொட ரை வென்றதன் மூலம், ஆஸ்திரேலிய அணி, ஒட்டுமொத்தமாக 35ஆவது முறையாக ஆஷஸ் தொடரை வென்றுள்ளது. இதுவரை நடந்துள்ள ஆஷஸ் தொடர்களின் புள்ளிவிவரங்கள் : மொத்த தொடர்கள் : 74 ஆஸ்திரேலியா வென்றது : 35 முறை இங்கிலாந்து வென்றது: 32 முறை சமனில் முடிந்தவை : 7 முறை
விடைபெற்றார் கவாஜா
ஆஷஸ் தொடரோடு சர்வ தேச கிரிக்கெட் போட்டி யில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்தி ரேலிய வீரர் உஸ்மான் கவாஜா அறி வித்தார். அதன்படி அவரது கடைசி டெஸ்ட் போட்டியான, சிட்னி டெஸ்ட் போட்டியில் 23 ரன்கள் (17, 6 - இரண்டு இன்னிங்ஸ்) எடுத்து கிரிக்கெட் உலகில் இருந்து வெற்றியோடு உஸ்மான் கவாஜா விடைபெற்றார். வலுவான பேட்டிங் திறன் கொண்ட கவாஜா 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதம், 28 அரை சதம் என 6,229 ரன்கள் எடுத்துள்ளார். அதே போல 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதம், 12 அரை சதங்களு டன் 1,554 ரன்கள் எடுத்துள்ளார். 9 டி-20 போட்டிகளில் ஒரு அரைசதத்து டன் 241 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில்,”தேங்க்ஸ் உஜ்ஜி #419 (THANKS UZZY #419)” என்ற சிறப்பு மரியாதை ஏற்பாடுகளுடன் (மைதான எழுத்துக்கள்) கவாஜா வை கிரிக்கெட் உலகில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழி யனுப்பி வைத்தது. அதே போல ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் கிரிக்கெட்டின் பிரியாவிடை வாழ்த்துகளை கவாஜா தெரிவித்தனர்.
