games

img

தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைக்கு ஊக்கத்தொகை வழங்கல்!

கோ – கோ மற்றும் 19 வயதினற்குட்பட்ட மகளிருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைக்கு தமிழ்நாடு அரசின் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வென்றது. அவ்வணியில் தமிழ்நாட்டு வீராங்கனை கமலினி இடம் பிடித்து சிறப்பாக விளையாடி அசத்தினார். இந்நிலையில், அவரை கவுரவபடுத்தும் விதமாகவும். ஊக்கப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாடு அரசின் உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அவரது பெற்றோரிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல், புதுடெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை ஆடவர் பிரிவில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீரர் சுப்ரமணிக்கும் உயரிய ஊக்கத்தொகையாக ரூ25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் உடனிருந்தனர்.