games

img

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா  

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா மவுண்ட் மாங்கனூயி நகரில் நடைபெற்ற  மகளிர் உலகக்கோப்பையின் 6ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  

இந்த போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. கேப்டன் பிஸ்மா மரூஃப் சிறப்பாக விளையாடி 122 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரமும், விக்கெட் கீப்பருமான அலிசா ஹெலி அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார்.