மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இன்று (சனிக்கிழமை) மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ரச்சேல் ஹெய்ன்ஸ் மற்றும் அலிசா ஹீலி ஆகியோர் சிறப்பாக விளையாடி 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய அலிசா ஹீலி 72 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரசேல் ஹெய்ன்ஸ் 43 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் கேப்டன் மேக் லேன்னிங் மற்றும் எல்லிஸ் பெர்ரி நிலைத்து நின்று ஆடி 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த எல்லிஸ் பெர்ரி 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.
48 ஆவது ஓவரில் அந்த அணியின் கேப்டன் மெக் லேன்னிங் 97 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். பெத் மூனி ஆஸ்திரேலியா வெற்றியை உறுதி செய்தார். 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் பூஜா வஸ்திராகர் 5 விக்கெட்டுகளையும் சிநேஹ் ராணா, மேக்னா சிங் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய மகளிர் அணி 5 ஆட்டங்களில் 2 வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளில் நெட் ரன் ரேட் அடிப்படையில் 4ஆவது இடத்தில் உள்ளது.