இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
7ஆவது இடத்தில் களமிறங்கிய டிக்வெல்லா 58 (59) மட்டுமே அரை சதம் கடந்தார். அடுத்து மேத்யூஸ் 39 (71), கருணரத்னே 28 (84) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார்கள். இதனால், முதல் இன்னிங்சில் 59 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கேமரூன் கிரீன் 77 ரன்களும், உஸ்மான் கவாஜா 71 ரன்களும் எடுத்தனர் .
இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இலங்கை அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வார்னர் முதல் 4 பந்துகளிலேயே 10 ரன்கள் சேர்த்து அணிக்கு 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.