புரோ கபடி கோப்பை யாருக்கு? ஹரியானா - பாட்னா இன்று பலப்பரீட்சை
11ஆவது சீசன் புரோ கபடி தொடர் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தொடங்கியது. தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், யு மும்பா (மும்பை), புனே பால்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், பெங்கால் வாரியார்ஸ், ஜெய்ப்பூர் பாந்தர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், உ.பி., யோதாஸ், பாட்னா பைரட்ஸ், தபாங் தில்லி என மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. சுமார் 3 மாத காலமாக நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் ஹரியானா, தில்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கும், உ.பி., யோதாஸ், பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய 4 அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கும் தகுதி பெற்றன. எலிமினேட்டர் சுற்று முடிவில் உ.பி., யோதாஸ், பாட்னா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இறுதியில் ஹரியானா - பாட்னா தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் உ.பி., யோதாஸ் அணியை ஹரியானாவும், தில்லி அணியை பாட்னாவும் வீழ்த்தின. இத்தகைய சூழலில் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஹரியானா - பாட்னா அணிகள் கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் முறையாக புரோ கபடி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் ஹரியானா அணியும், 4ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் பாட்னா அணியும் என இரு அணிகளும் கோப்பை மீது குறியாக களமிறங்குவதால் இறுதி ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு - ரூ. 3 கோடி
2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு - ரூ. 1.8 கோடி
3ஆவது மற்றும் 4ஆவது இடம் - ரூ. 90 லட்சம் (தலா)
5ஆவது மற்றும் 6ஆவது இடம் - ரூ. 45 லட்சம் (தலா)
சிறந்த வீரர் - ரூ.15 லட்சம்
சிறந்த ரைடர் - ரூ.10 லட்சம்
சிறந்த டிபெண்டர் - ரூ.10 லட்சம்
சிறந்த அறிமுக வீரர் - ரூ. 8 லட்சம்
“பாக்சிங் டே” டெஸ்ட் : நிதிஷ் அபார சதம்
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்தி ரேலிய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பார்டர் - கவாஸ்கர் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி “பாக்சிங் டே” என்ற பெயரில் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் கள மிறங்கிய நிலையில், மூத்த வீரர் ஸ்மித்தின் (140) அபார சதத்தின் உத வியால் 122.4 ஓவர்களில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடக்கத் தில் திணறியது. 100 ரன்களை கடப்பதே சிரமம் என எதிர்பார்க்கப்பட்டது. இக்கட் டான சூழலில் ஜெய்ஸ்வால் - கோலி ஜோடியின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி 150 ரன்களை கடந்தது. ஜெய்ஸ்வால் (82) - கோலி (36) ஜோடி ஆட்டமிழந்த பின்பு நிதிஷ் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி இந்திய அணியை சரிவில் மீட்க கடுமையாக போராடியது. அரைசதமடித்து அசத்திய தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் (50) லயன் சுழலில் வீழ்ந்தார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப் படுத்திய நிதிஷ் சதமடித்து அசத்தி னார். சர்வதேச அரங்கில் நிதிஷுக்கு இது முதல் ஆகும். 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 116 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்து இருந்தது. நிதிஷ் (105) - சிராஜ் (2) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ், போலந்து தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி 116 ரன்கள் பின்னிலையுடன் உள்ள நிலையில், ஞாயிறன்று தொடர்ந்து 4ஆவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.