districts

img

மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.28 -  சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்ற வாளிக்கு கடும் தண்டனை வழங்க  வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி  கொடுத்த புகாரை இணையத்தில் வெளி யிட்ட தமிழ்நாடு காவல்துறையை கண்டித்தும், அனைத்து கல்வி நிலைய வளாகத்திலும் மாணவிகளுக்கான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வலியுறுத்தியும், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் மன்னர் சர போஜி கல்லூரி கிளை சார்பில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ரஞ்சித் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கு.சந்துரு கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். திருவாரூர் குடவாசல் கல்லூரியில் நடை பெற்ற போராட்டத்திற்கு கிளை தலை வர் ஆர்.சிவனேஷ் தலைமை வகித்தார்.  மாவட்ட துணைச் செயலாளர் க. கலைச்செல்வன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ரா.ரஞ்சித், மு.முகேஷ் ராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் பாப்புநிஷா, யமுனா ஆகியோர் கலந்து  கொண்டனர். மாவட்டச் செயலாளர் பா. லெ.சுகதேவ் கண்டன உரையாற்றி னார். நன்னிலம் நன்னிலம் பாரதிதாசன் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடை பெற்ற போராட்டத்திற்கு கிளைச் செய லாளர் ஜெ.தயாநிதி மாறன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பா.விக்னேஷ், சு.கௌசிகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் மு.சூரிய பிரியன் கண்டன உரையாற்றினார். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மன்னர் கல்லூரி கிளைத் தலைவர் தாரணி பிரயா தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வசந்தகுமார் கண்டன  உரையாற்றினார்.