districts

img

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சீர்கேடுகள்

கரூர், டிச.28 - கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் போராட்டம் அறி விக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் - ஜவுளி, பஸ்பாடி, கொசு வலை, விவசாயம், காகித நிறுவனம், சர்க்கரை ஆலை, சிமெண்ட் ஆலை என பல்வேறு துறைகளில் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்து விளங்குகிறது. மேற்கண்ட தொழில் நிறுவனங்களில் பல  ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பொது மக்கள் என தினந்தோறும் கரூர் மாநகருக்கு  வந்து செல்கின்றனர். கூலித் தொழிலா ளிகள், விவசாயத் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், அவர் களுக்கு உண்டாகும் நோய்களுக்கு பல  லட்சம் ரூபாய் செலவு செய்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடி யாததால் அவர்களின் ஒரே நம்பிக்கையாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை  உள்ளது.  போதிய ஸ்கேன் வசதி இல்லை கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை கரூர் காந்தி கிராமத்தில் செயல்பாட் டிற்கு வந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது.  ஆனால் உள் மற்றும் வெளி நோயாளி களுக்கு சிறப்பான சிகிச்சை முழுமையாக கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக நரம்பியல், கார்டியாலஜி, யூரோ லஜி, சிறுநீரக பிரிவு ஆகிய நோய்களுக்கு நிரந்தரமான சிறப்பு மருத்துவர்கள் பணி யில் இல்லை. தினந்தோறும் மருத்துவ மனைக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப  அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கூடுதலாக இல்லா ததால் நோயாளிகள் ஸ்கேன் எடுப்பதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.  இது போன்ற ஸ்கேன் எடுக்கும் கருவி களை அதிகப்படுத்த வேண்டும். மேல் சிகிச்சைகளுக்கு நோயாளிகளை பரிந்துரை  செய்கிற நிலையில், அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் நோயாளி கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கடுமை யான நெருக்கடியை சந்திக்கின்றனர். தனியார் ஆம்புலன்ஸ் வைத்துக் கொள்கிற அளவிற்கு வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள்தான் இங்கு வருகின்றனர். அவர்க ளின் நலன் கருதி அவசர தேவைக்கு ஆம்பு லன்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.  தலைமை மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளி நோயாளிகள் பிரிவு, ஓபி, அவசர பிரிவு வார்டுகளில் மருத்துவ மாணவர்களை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் உயர் மருத்துவ சிகிச்சை கிடைக் காமல், நோயாளிகள் நோயின் தன்மை அதி கரித்து பாதிக்கப்படுகின்றனர். இதனை தவித்து நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்திட சம்பந்தப்பட்ட வார்டு களில் தலைமை மருத்துவர் சிகிச்சை அளிப் பதை உத்தரவாதம் செய்ய மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நோயாளிகள் மற்றும் பொதுமக்க ளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி  நேரமும் கிடைக்கச் செய்ய வேண்டும்.  மருத்துவமனையில் உள்ள கழிப்பறை களுக்குள் சென்று வந்தால் நோய் தொற்று  ஏற்படும் அவலநிலை உள்ளது. இந்த  மருத்துவமனை நோயை தீர்க்கும் மருத்து வமனையாக இல்லாமல், நோயை உண்டாக் கும் மருத்துவமனையாக இருக்கிறது. மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் தூய்மை யாக பராமரிக்கப்படுவதை மருத்துவமனை  நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். எம்.ஆர்.ஐ. சிடி ஸ்கேன் ரிப்போர்ட் விப ரங்களை நோயாளிகள் பெறுவதற்கு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுப்ப துடன், எம்.ஆர்.ஐ., சிடி ஸ்கேன் எண்ணிக் கையை அதிகப்படுத்த வேண்டும்.  லிப்ட் இயந்திரம் பழுது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்ள லிப்ட் இயந்திரங்கள் பழுதாகி பல நாட்களாக செயல்படாமல் உள்ளன. இதனால் நோயாளிகள் 6 மாடி வரை  நடந்து செல்ல வேண்டியுள்ளது. செயல்படும்  லிப்ட் இயந்திரங்களுக்கும் நீண்ட நேரம் காத்திருக்கும் சிரமத்தையும் நோயாளிகள் சந்திக்கின்றனர். பழுதடைந்த லிப்ட் இயந்தி ரங்கள் உடனே சரி செய்து நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் உடன் இருப்பவர்களிடம் கனிவாக நடந்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களிடம் அநாகரிகமாகவும், கடுமை யாக நடந்து கொள்ளும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் வாகனம் நிறுத்தும் இடங்களில் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை அமைத்து சுகாதாரமாக பரா மரிக்க வேண்டும்.  மருத்துவமனைக்கு வரு பவர்கள் சிரமமின்றி வந்து செல்ல, பேருந்து  வசதிகளை அதிகப்படுத்த மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மேற்கண்ட மக்கள் பிரச்சனைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கரூர் மாவட்டக் குழு சார்பில் நேரடி கள  ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, கோரிக் கைகளை போர்க்கால அடிப்படையில் நிறை வேற்றிட வேண்டும் என வலியுறுத்தி கட்சி யின் மாவட்டக் குழு சார்பில் டிச.30 அன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.  போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தலைமை யில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடை பெற்றது. அதில், கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.  பேச்சுவார்த்தையில், கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாநகரச் செயலா ளர் எம்.தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஹோச்சுமின், எஸ்.பி.ஜீவானந்தம், எம்.சுப்பிரமணியன், ப.சர வணன், மாநகரக் குழு உறுப்பினர்கள் கே. சக்திவேல், சதீஸ் ஆகியோர் கலந்து கொண்ட னர்.