districts

img

போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புக!

திருச்சிராப்பள்ளி, டிச.28 - சிஐடியு தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக ஊழி யர்கள் சங்கத்தின் திருச்சி,  கரூர் மண்டல 39 ஆவது  ஆண்டு பேரவை வெள்ளிக் கிழமை திருச்சி ரவி மினி ஹாலில் தோழர் திருத்து வதாஸ் நினைவரங்கத்தில் நடந்தது.  பேரவைக்கு மண்டல தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். சங்க  கொடியை சிஐடியு அரசு போக்குவரத்து கழக மண்டல முன்னாள் பொரு ளாளர் முருகேசன் ஏற்றி னார். மண்டல துணை பொதுச் செயலாளர் முருகன்  வரவேற்றார். அஞ்சலி தீர்மா னத்தை மண்டல துணைத் தலைவர் முத்துக்கருப்பன் வாசித்தார். வேலை அறிக் கையை மண்டல பொதுச் செயலாளர் மாணிக்கம் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை மண்டல பொருளாளர் சிங்கராயர் சமர்ப்பித்தார்.  கூட்டத்தில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். சிஐடியு புறநகர் மாவட்டச் செயலா ளர் சிவராஜன், சிஐடியு கரூர் மாவட்டச் செயலாளர் முருகேசன், எஸ்சிடிசி சிஐடியு மாநிலத் தலைவர் அருள்தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 15ஆவது 12 (13) ஊதிய ஒப்பந்தத்த பேசி முடிக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப்  பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். பேருந்து கால அட்டவ ணையை மாற்றி அமைக்க வேண்டும். சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இணைய தளம் வழியாக வரும் பொய்  புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். விபத்துக்களை தவிர்த்திட போக்குவரத்து கழக பேருந்துகளில் விளம்பரம் மற்றும் சாலை  சந்திப்பு பகுதியில் விழிப்பு ணர்வு பதாகை வைக்க  வேண்டும். 12 (13) ஒப்பந்தத் தில் குறிப்பிட்டுள்ளபடி சுழல்முறை பணி முறை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சம்மேளன பொதுச்  செயலாளர் ஆறுமுக நயி னார் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் சிஐடியு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஊழியர்கள் சங்கத்தின் திருச்சி, கரூர் மண்டலம் மற்றும் மத்திய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  மண்டல துணை பொது  செயலாளர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.