புதுக்கோட்டை, டிச.28 - தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை, தமிழ் நாடு ஓவிய நுண்கலைக் குழு வும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து, ஓவியர் ஆலங்குடி சுப்பிர மணியனின் ‘சித்தூ ஓவியக் கண்காட்சி’யை வெள்ளிக்கிழமை புதுக் கோட்டை நகர்மன்றத்தில் நடத்தின. ஞாயிறு வரை நடை பெறும் இந்த ஓவியக் கண்காட்சியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமை யேற்று தொடங்கி வைத்து, கண்காட்சியைப் பார்வை யிட்டு சிறப்புரையாற்றினர். எழுத்தாளர் கோணங்கி கருத்துரை வழங்கினார். தமுஎகச மாநில துணைத் தலைவர்கள் நா.முத்துநில வன், ஆர்.நீலா, புதுக் கோட்டை தமிழ்ச்சங்கத் தலைவர் தங்கம்மூர்த்தி, தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஜீவி, இரா.தனிக் கொடி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக தமுஎகச மாவட்டச் செயலாளர் ஸ்டா லின் சரவணன் வரவேற்க, ஓவியர் ஆலங்குடி சுப்பிர மணியன் நன்றி கூறினார்.