அறந்தாங்கி, டிச.28 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றி யம் காரக்கோட்டை ஊராட்சி மன்ற செயலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்த லைவர் பரணி இ.ஏ.கார்த்தி கேயன் தலைமை வகித்து, ரூ.39.95 லட்சத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை திறந்து வைத்தார். ஒன்றிய துணைத் தலைவர் எஸ்.எம்.சீனியர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கன்சூல் மஹரியா, ஒன்றியக் குழு உறுப்பினர் வெண்ணிலா சேதுராமலிங்கம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர், வார்டு உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் சத்யகலா உதய குமார் நன்றி கூறினார்.