கும்பகோணம், டிச.28 - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவ ரும் பொருளாதார மேதையும் முன்னாள் பாரத பிரத மருமான டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி கும்பகோணம் காந்தி பூங்காவில் அவரது உருவப் படத்திற்கு அனைத்து கட்சியினரும் மலர் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் லோக நாதன், திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி ,திராவிட கழக மாவட்டச் செயலாளர் நிம்மதி, சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் தமிழழகன், சிபிஎம் மாமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அமைதி ஊர்வலம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, சனிக்கிழமை மாலை புதிய பேருந்து நிலையத்தி லிருந்து அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் உறுப்பினர்கள் இரங்கல் உரையாற்றினர்.