திருச்சிராப்பள்ளி, டிச.28 - திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்ச நல்லூர் கிழக்கு ஒன்றியம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் உள்ளது. இதன் அருகில் இயங்கி வந்த இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில் இருந்து, ஒரு பெண் ஆட்டோ தொழிலாளர் உட்பட 6 பேர் வெளியேறினர். இவர்கள் சிஐடியு ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர் சங்கத்தின் புற நகர் மாவட்ட பொருளா ளர் சம்பத், சமயபுரம் பகுதி செயலாளர் மணி கண்டன், ஆலோசகர் கனகராஜ் முன்னிலை யில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில் உறுப்பின ராக இணைந்தனர். புதிதாக இணைந்த அனைத்து உறுப்பினர்களுக்கும், சிஐடியு புற நகர் மாவட்டப் பொருளாளர் சம்பத் உறுப்பி னர் அடையாள அட்டை, சிஐடியு ஸ்டிக்கர் வழங்கி வரவேற்றார். அக்கரைப்பட்டி சாய்பாபா ஆட்டோ நிலைய தலைவர் ராமச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.