கும்பகோணம், டிச.28 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமி டெட் நிறுவனம் கடந்த 121 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிறுவனம், லாபகரமான ஈவுத்தொகையை ஒவ்வொரு ஆண்டும் பங்குதாரர்களுக்கும், ஊக்கத்தொகையாக அந்நிறுவன பணியாளர்களுக்கும் சமூக சேவைக்காக பல நலத்திட்டங்களையும் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்நிறுவனத்தின் 125 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 126 ஆவது புதிய கிளை திறப்பு விழா, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் வெள்ளாளர் தெருவில் நடைபெற்றது. புதிய கிளை திறப்பு விழாவிற்கு நிதியின் தலைவர் எஸ்.கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். வல்லம் புதிய கிளையை திரு வையாறு சட்டமன்ற உறுப்பி னர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்தார். பாதுகாப்பு பெட்டக வசதியை வல்லம் தொழிலதிபர் எம்.திருஞானம் திறந்து வைத்தார். விழாவில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.முரசொலி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன், ஒன்றியச் செயலாளர் அருள் ஆனந்தசாமி, வல்லம் பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், நிதியின் துணைத் தலைவர் எஸ்.இராமலிங்கம், மேலாண் இயக்குநர் வேலப்பன், இயக்குநர்கள் அன்பழகன், பிரகாசம், துரைராஜ், அம்பிகா, குரு பிரசாந்த், தலைமை பொது மேலாளர் சுபாஷ், பொது மேலாளர் வெங்கடேசன், துணைப் பொது மேலாளர் கருணாநிதி, உதவி பொது மேலாளர்கள் முருகேசன், கிளை மேலாளர்கள் கணேசன், சாந்தினி, ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.