குவாலியர் 14 ஆண்டுகளுக்கு பின் இன்று கிரிக்கெட்போட்டி
மத்தியப்பிரதேச மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ளது குவாலியர். இங்கு 1978 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது மைதானம். ஆரம்பத்தில் ஆக்கி விளையாடி வந்தனர். எனவே, இந்த மைதானத்திற்கு இந்திய வீரர் ரூப் சிங் பெயர் சூட்டப்பட்டது. பிறகு, 1988 ஆம் ஆண்டில் முதல் முறையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்தியாவை எதிர்த்து மேற்கிந்திய தீவுகள் அணி விளை யாடியது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. அதே நேரத்தில், 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்தியாவை கென்யா தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த மைதானத்தில் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் விளை யாடிய சர்வதேச ஒருநாள் போட்டி நடை பெற்றது. இந்தப் போட்டியில்தான் சச்சின் டெண்டுல்கர் முதலாவது இரட்டை சதம் விளாசினார். அதன் பிறகு இந்த மைதானத்தில் ஒரு போட்டிக்கூட நடத்தப் படவில்லை. இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மைதானத்தில் டி 20 ஓவர் போட்டி ஞாயிற்றுக்கிழமை (அக்.6) அன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் இந்தியாவும் வங்கதேச அணியும் விளை யாடுகின்றன. இந்தப் போட்டியில் இந்தி யாவுக்கு அபிஷேக் சர்மாவும், சஞ்சு சாம்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.
8 வயதில் சாம்பியன் :குவியும் பாராட்டுக்கள்
சிறுவர் முதல் பெரிய வர்கள் வரை சைக்கிள் ஓட்டுவது என்பது அளாதி பிரியம். அதிலும் பந்த யம் என்றால் சொல்லவே தேவையில்லை. எட்டு வயது ஒரு சிறுவன் தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை வென் றது பிரிட்டன் முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. அந்த சிறுவனின் பெயர் ஹென்ரிக். மூன்று வயதில் சைக்கிள் ஓட்டத் தொடங்கி 8 வயதில் அச்சிறுவன் பிரிட்ட னின் ‘BMX racing’ என்ற வகை சைக்கிள் போட்டியில் அவர் சாதனை படைத்து வருகிறார். 2024-ஆம் ஆண்டு தேசி யப் போட்டியில் கலந்து கொண்ட அச்சிறுவன், அவ ரது வயது பிரிவில், இரண்டு முறை பிரிட்டிஷ் சாம்பியன் ஷிப்பில் வென்றிருக்கிறார். முதல் முறை போட்டியில் கலந்து கொண்டபோது அவ ருக்கு மூன்று வயது. ஹென் ரிக்குக்கு பயிற்சி கொடுத்து வருப வர் நீல் ஃபோர். இந்தச் சிறுவனின் திறமை குறித்து அவர் கூறுகையில்,“ஹென்ரிக் கொஞ்சம் ஸ்பெஷல். மிக வும் வேகமாக சைக்கிள் ஓட்டு வார்,” என்று தெரிவித்தி ருக்கிறார். “அவரது வயதில் இவர் தான் உலகிலேயே வேகமான வர் என்று நினைக்கிறேன்,” எனவும் கூறியிருக்கிறார். ஹென்ரிக்கின் தந்தை மார்க், ஐரோப்பா, பிரிட்டன் என எங்கும் ஹென்ரிக் ஒரு போட்டி யில் கூட தோற்றதில்லை என் கிறார். ஹென்ரிக்கின் தாய், “தனது குழந்தை சாதிப்பதைக் காண்பது அற்புதமாக உள்ளது” என்கிறார். எட்டு வயதில் அசத்தி வரும் இந்த சிறுவனின் புகைப்படம் பிரிட்டன் முழுவதும் வைர லாகி வருகிறது. தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் ஹென்ரிக்கை சைக்கிள் பந்தய வீரர்கள் மட்டுமின்றி பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த நிலையில், பிரிட்டன் பிரபல வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ மிக விரைவில் சர்வதேச போட்டி களில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். பதக் கங்களை குவிக்க வேண்டும் சாம்பியன் பட்டங்கள் அனை த்தையும் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு என் றும் ஹென்ரிக் தெரிவித்துள் ளார்.
புதுதில்லி, 7 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ஆக்கி இந்தியா லீக்
ஆக்கி இந்தியா அமைப்பு சார்பில் ஐ.பி.எல்., பாணி யில் ஆக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் கடந்த 2013ல் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் ஆறு அணிகள் மோதின. கடைசியாக 2017-ல் நடைபெற்ற தொடரில் கலிங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் இத்தொடர் நடக்கவில்லை. தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பின், இதன் 6-வது சீசன், வரும் டிசம்பர் 28ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதன் முறையாக பெண்களுக்கான தொடரும் நடத்தப்படுகிறது.. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தில்லியில் நடக்கிறது. ஒவ்வொரு அணியில் 24 பேர் (16 இந்திய வீரர் - 8 வெளிநாட்டு வீரர்) இடம் பெறுவர். ரூ. 2 லட்சம், ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் என மூன்று பிரிவுகளில் ஆக்கி நட்சத்தி ரங்கள் ஏலத்தில் இடம் பெற உள்ளனர்.