இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இந்த போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி துவங்குவதாக இருந்தது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி டிசம்பர் 8 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பரவிய ஒமிக்ரான் தொற்றால் நடைபெற இருந்த கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். மேலும் இரு அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போட்டிகள் அதற்கு பதிலாக, வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அமைப்பின் பொது கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.