games

img

பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட்...  கடைசி நேரத்தில் தொடரை ரத்து செய்து ஊருக்கு கிளம்பிய நியூசிலாந்து அணி...  

லாகூர் 
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 5 டி-20 என இரண்டு விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் மண்ணிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

இந்த தொடரின் முதல் கட்டமான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் இன்று (வெள்ளி) நடைபெறவிருந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு தொடரை ரத்து செய்து, தங்கள் நாட்டிற்கு திரும்புவதாக நியூஸிலாந்து அணியினர் அறிவித்தனர்.  

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக எங்கள் நட்டு அரசு (நியூஸிலாந்து) எச்சரிக்கை அறிவிப்பு விடுத்ததால் தான் இந்த திடீர் முடிவு எடுத்துள்ளோம் என நியூஸிலாந்து கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது.