games

img

விளையாட்டு...

நடுவர்களுக்கும் பிசிசிஐ நெருக்கடி? பாகிஸ்தான் மண்ணில்  பணியாற்ற மாட்டேன் என ஓட்டமா?

கிரிக்கெட் உலகின் மினி உல கக்கோப்பை என அழைக்கப் படும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை கிரிக்கெட் தொடர் 19ஆம் தேதி தொட ங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறு கிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள்) நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக் கான நடுவர்கள் குழுவில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை. சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) நடு வர்கள் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த  நிதின் மேனன் மற்றும் போட்டி நடு வர்கள் குழுவில் முன்னாள் வேகப்பந்து வீரரான ஜவகல் ஸ்ரீநாத் இடம் பெற்ற னர். ஆனால் இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளனர். இந்திய நடுவர்கள் வில கல் தன்னிச்சையானதா? இல்லை மோடி அரசு ஏதேனும் நெருக்கடி அளித்ததா? என பல்வேறு கேள்விகள் கிளம்பியுள்ளன.  மழுப்பல் தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் பாகிஸ்தான் செல்ல இய லாது என்று நடுவர் நிதின் மேனன் அறி வித்து விட்டார். தொடர்ந்து நான்கு மாதங்களாக பணியாற்றி வருவதால் தனக்கு விடுப்பு அளிக்குமாறு ஸ்ரீநாத்தும் கேட்டுக் கொண்டார். ஐசிசி  தலைவராக அமித் ஷா மகன் ஜெய் ஷா உள்ள நிலையில், இதனை ஐசிசி ஏற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் ஜடேஜாவுக்கு என்ன வேலை?
தமிழ்நாடு முன்னாள் வீரர் பத்ரிநாத் சரமாரி கேள்வி

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்தது ஆச்சரிய மளிக்கிறது என தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சாம்பியன்ஸ் டிராபி அணியில் ரவீந்திர  ஜடேஜா இடம்பெற்றிருப்பது குறித்து நான் ஆச்சரிய மடைந்தேன். அவருக்கு அணியில் வேலையே இல்லை.  வருண் சக்கரவர்த்தியும் அணியில் தற்போது சேர்க்கப்பட்டு விட்டார். அக்சர் படேல், குல்தீப் யாதவ் என்று ஏற்கெனவே இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் இருக்கும் போது ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்த்திருப்பது தேவை யற்றது. ஆடும் லெவனில் அவர் இடம்பெற முடியாது, மிக  மிகக் கடினம். அதே போல பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லாத வீரரை அணியில் எடுத்து என்ன பயன்? ரோகித் சர்மாவுக்கு குல்தீப் பிடிக்கும். அதனால் அவரை ஆத ரிக்கிறார்;  குல்தீப் ஆடும் லெவனில் நீடிக்கிறார்” என அவர் கூறினார்.

ஸ்டோய்னிஸ் ஓய்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்ச த்திர ஆல்ரவுண்டர் மார்கஸ்  ஸ்டோய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். வலதுகை பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டோய்னிஸ் (35)  ஆஸ்திரேலியாவுக்காக 71  ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 6 அரைசதம் என மொத்தம் 1,495 ரன்கள் குவித்துள்ளார். அதே போல 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.  தற்போதைய  சூழ்நிலையில் ஆஸ்திரேலிய  அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக ஸ்டோய்னிஸ் உள்ள நிலையில், திடீரென ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளது ஆஸ்தி ரேலிய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி-20 சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் டிராபி? சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அந்த தொடருக்காக  தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர்  கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸும் சேர்க்கப்பட்டுள்ளார்.  ஆனால் திடீரென காரணம் எதுவும் இன்றி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்து இருப்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மாற்று ஆல்ரவுண்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இடியாப்ப சிக்கலில் தவித்து வருகிறது.